இரா. பாலகிருஷ்ண பிள்ளை | |
---|---|
![]() | |
கேரள அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் | |
பதவியில் 10 மார்ச்சு 2003 – 29 ஆகத்து 2004 | |
பதவியில் 22 மார்ச்சு 1995 – 28 சூலை 1995 | |
பதவியில் 24 சூன் 1991 – 16 மார்ச்சு 1995 | |
பதவியில் 26 திசம்பர் 1975 – 25 சூன் 1976 | |
கேரள அரசின் மின்சாரத் துறை அமைச்சர் | |
பதவியில் 25 மே 1986 – 25 மார்ச் 1987 | |
பதவியில் 24 மே 1982 – 5 ஜூன் 1985 | |
பதவியில் 25 ஜனவரி 1980 – 20 அக்டோபர் 1981 | |
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1971–1977 | |
முன்னையவர் | கி. பி. மங்களத்து மாடம் |
பின்னவர் | பி. கே. நாயர் |
தொகுதி | மாவேலிக்கரை |
கேரள சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 25 மார்ச்சு 1977 – 12 மே 2006 | |
முன்னையவர் | கொட்டாரா கோபாலகிருஷ்ணன் |
பின்னவர் | பி. ஆயிசா பொட்டி |
தொகுதி | கொட்டாரக்கரை |
பதவியில் 1960 –1965 | |
முன்னையவர் | என். ராஜகோபாலன் நாயர் |
பின்னவர் | பி. கே. ராகவன் |
தொகுதி | பத்தனாபுரம் |
கேரள மாநில முன்னேறிய வகுப்பினர் நல வாரிய கழகத்தின் தலைவர் | |
பதவியில் 17 மே 2017 – 3 மே 2021 | |
முன்னையவர் | நீதிபதி ஏ. வி. ராமகிருஷ்ண பிள்ளை |
பின்னவர் | கே. கி. பிரேம்ஜித் |
பதவியில் 23 சூலை 2013 – 26 சனவரி 2015 | |
முன்னையவர் | அலுவலகம் உருவாக்கப்பட்டது |
பின்னவர் | நீதிபதி ஏ. வி. ராமகிருஷ்ண பிள்ளை |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | வளகோம், கொட்டாரக்கரை ,திருவிதாங்கூர் இராச்சியம் | 3 ஏப்ரல் 1934
இறப்பு | 3 மே 2021 கொட்டாரக்கரை, கொல்லம், கேரளம், இந்தியா | (அகவை 87)
தேசியம் | ![]() |
அரசியல் கட்சி |
|
துணைவர் | வத்சலா (இற. 2018) |
பிள்ளைகள் | கீ. பா. கணேஷ் குமார் உட்பட மூவர் |
வாழிடம் | கீழோட்டே புதென் வீடு , வளகோம், கொட்டாரக்கரை, கொல்லம் |
பணி | அரசியல்வாதி |
கீழோட்ட ராமன் பாலகிருஷ்ண பிள்ளை (Keezhoote Raman Balakrishna Pillai) (8 மார்ச் 1935-3 மே 2021) இந்தியாவில் கேரள மாநில அரசில் அமைச்சராக பணியாற்றிய ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் போக்குவரத்து மற்றும் மின்சாரம் போன்ற துறைகளை வகித்தார். கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்கரை சட்டமன்றத் தொகுதியிலிருந்து கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக கேரள சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் கேரள காங்கிரசு கட்சியின் தலைவராகவும் இருந்தார். [1] பிள்ளை தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் கேரள மாநில அரசியலில் சர்ச்சைக்குரிய நபராகவே இருந்தார். ஊழலுக்காக சிறையில் அடைக்கப்பட்ட முதல் கேரள அமைச்சர் இவர்தான்.
பாலகிருஷ்ண பிள்ளை 1934 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி கொல்லம் மாவட்டத்தில் கொட்டாரக்கரை அருகே வளகோமில் கீழோட்டே ராமன் பிள்ளை மற்றும் கார்த்தியானி அம்மா ஆகியோரின் மகனாகப் பிறந்தார். நில உரிமையாளரான இவரது தந்தை நாயர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் இன்றைய கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் ஏராளமான நிலங்களைக் கொண்டிருந்தார். பிள்ளை வத்சலா என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவரது மகன் கீ. பா. கணேஷ் குமார் இந்திய நடிகரும், தொலைக்காட்சி தொகுப்பாளரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். கணேஷ் குமார் 2001-03 மற்றும் 2011-13 போது மாநில அமைச்சராக பணியாற்றினார்.[2] பிள்ளையின் மனைவி வத்சலா குமாரி 3 ஜனவரி 2018 அன்று தனது 76 வயதில் காலமானார்.[3]
பாலகிருஷ்ண பிள்ளை திருவிதாங்கூர் மாணவர் சங்கத்தின் உறுப்பினராக இருந்தார் (இது பின்னர் திருகோச்சி வித்யார்த்தி கூட்டமைப்பு எனவும் பின்னர் கேரள மாணவர் சங்கமாகவும் மாறியது).[4]
பாலகிருஷ்ண பிள்ளை பின்னர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். 1960 ஆம் ஆண்டில், இவர் கேரள பிரதேச காங்கிரசு குழு நிர்வாகத்திலும் அகில இந்திய காங்கிரசு குழுவிலும் உறுப்பினரானார்.[4]
1960 ஆம் ஆண்டில் கொல்லம் மாவட்டத்தின் பத்தனாபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து முதல் முறையாக கேரள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் வேட்பாளராக, 25 வயதில், கேரளாவின் இளைய சட்டமன்ற உறுப்பினர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.[5]
1964இல் கே. எம். ஜார்ஜ் தலைமையில் பதினைந்து சட்டப் பேரவை உறுப்பினர்கள் (பாலகிருஷ்ண பிள்ளை உட்பட) காங்கிரசை விட்டு வெளியேறி, ஜார்ஜ் தலைவராகவும் பிள்ளை பொதுச் செயலாளராகவும் கேரள காங்கிரசு என்ற பிராந்திய கட்சியை உருவாக்கினர். பிள்ளை 1965 இல் தனது சொந்த தொகுதியான கொட்டாரக்கரையிலிருந்து தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால் 1967 மற்றும் 1970 ஆகிய இரண்டு தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்டார். 1971 பொதுத் தேர்தலில் மாவேலிக்கரா தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 1977 வரை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.[1]
டிசம்பர் 1975 முதல் ஜூன் 1976 வரை, இவர் கேரள அமைச்சரவையில் போக்குவரத்து, கலால் மற்றும் சிறைத்துறை அமைச்சராக பணியாற்றினார்.[6]
1976இல் கே. எம். ஜார்ஜ் இறந்த பிறகு, பாலகிருஷ்ண பிள்ளை மற்றும் க. மா. மாணி இடையே கட்சியின் கட்டுப்பாட்டிற்காக மோதல் ஏற்பட்டது. 1977இல் இந்தக் கட்சி மணி மற்றும் பிள்ளை குழுக்களாகப் பிரிந்தனர். 1977 ஆம் ஆண்டிலும், பின்னர் 1980,1982,1987,1991,1996 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளிலும் மாநில சட்டமன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 2006 தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். 1980இல் இவர் பெற்ற 37,000 வாக்குகள் வித்தியாச வெற்றி, மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஒரு சாதனையாக இருந்தது.[7][6]
பிள்ளை ஐக்கிய ஜனநாயக முன்னணியின் நிறுவனர் உறுப்பினராக இருந்தார். செ. அச்சுத மேனன், கே. கருணாகரன், எ. கி. நாயனார் மற்றும் அ. கு. அந்தோனி தலைமையிலான பல்வேறு அமைச்சகங்களில் தொடங்கி பல ஆண்டுகள் அமைச்சராக இருந்தார்.[8]
இடமலயாறு அணை மற்றும் கல்லடையாறு அணைக் கட்டுமானத் திட்டங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க நீதிபதி கே. சுகுமாரனை அரசு நியமித்தது. அவரது அறிக்கையின் அடிப்படையில் பாலகிருஷ்ண பிள்ளை மீது சிறப்பு நீதிமன்றம் வழக்குத் தொடர்ந்தது.[9] இடமலையாறு நீர்மின் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை வழங்கியதில் தங்கள் பதவியை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி பாலகிருஷ்ண பிள்ளை மற்றும் இரண்டு பேருக்கு பிப்ரவரி 10,2011 அன்று உச்ச நீதிமன்றம் ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.[10]உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி. சதாசிவம் மற்றும் பி. எஸ். சௌகான் அடங்கிய அமர்வு, மூவரையும் விடுவித்த கேரள உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தது. முதல்வர் வி. எஸ். அச்சுதானந்தன், உச்ச நீதிமன்றத்தில், விடுதலை தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்., இந்திய உச்ச நீதிமன்றம் அச்சுதானந்தனின் மேல்முறையை அனுமதித்தது.
சுவாசப் பிரச்சினைகள் காரணமாக சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த [11] பிள்ளை 2021 மே 3 அன்று கொட்டாரக்கரையிலுள்ள விஜயா மருத்துவமனையில் காலமானார்.[12]