இராகேசு சுன்சுன்வாலாRakesh Jhunjhunwala | |
---|---|
பிறப்பு | ஐதராபாது, தெலங்காணா, இந்தியா[1] | 5 சூலை 1960
இறப்பு | 14 ஆகத்து 2022 மும்பை, மகாராட்டிரம், இந்தியா | (அகவை 62)
கல்வி | பட்டயக் கணக்கறிஞர் |
படித்த கல்வி நிறுவனங்கள் |
|
பணி | பங்குச்சந்தை முதலீட்டாளர் |
வாழ்க்கைத் துணை | ரேகா சுன்சுன்வாலா[2] |
பிள்ளைகள் | 3 |
இராகேசு சுன்சுன்வாலா (Rakesh Jhunjhunwala, (5 சூலை 1960 – 14 ஆகத்து 2022)[3] இந்தியாவைச் சேர்ந்த பங்குச்சந்தை முதலீட்டாளரும், தொழில்முனைவோரும் ஆவார். 2012 சூலையில் இவர் $5.5 பில்லியன் சொத்து மதிப்புடன் இந்தியாவின் 35வது பெரிய பணக்காரராக விளங்கினார்.
ராஜஸ்தான் மாநிலத்தைப் பூர்வீகமாக கொண்ட இராகேஷ், மும்பையில் வளர்ந்தார். பட்டயக் கணக்கறிஞர் தேர்வை முடித்துள்ள இவர் பங்குச் சந்தையில் ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக முழுநேர பங்குச் சந்தை வணிகராக மாறினார். 1985ல் 5,000 ரூபாய் மூலதனத்தில் தனது பங்கு சந்தை வர்த்தகத்தை துவங்கி, 2022ல் 11,000 கோடி ரூபாய் அளவுக்கு தனது மூலதனத்தை வளர்த்துள்ளார்.[4]
இவர் செய்துள்ள முதலீடுகளில் டைட்டன் நிறுவனத்தில் கொண்டுள்ள 4% பங்குகளே இவரின் பெரிய முதலீடாகும்.[5]
2022 ஆம் ஆண்டு ஆகாசா என்னும் குறைந்த கட்டண விமான நிறுவனத்தை துவங்கினர்.[6]
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)