இராசேந்திரா நினைவு மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம்

இராசேந்திரா நினைவு மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம்
Rajendra Memorial Research Institute of Medical Science
வகைஆய்வு நிறுவனம்
உருவாக்கம்1963 (1963)
Parent institution
இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (இந்தியா)
சார்புகொல்கத்தா பல்கலைக்கழகம்
பணிப்பாளர்மருத்துவர் கிருஷ்ண பாண்டே
அமைவிடம்
அகம், குவான், சாதிபூர்
, , ,
25°35′59″N 85°11′48″E / 25.5997386°N 85.1966277°E / 25.5997386; 85.1966277
மொழிஆங்கிலம், இந்தி
இணையதளம்rmrims.org.in
இராசேந்திரா நினைவு மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் is located in Patna
இராசேந்திரா நினைவு மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம்
Location in Patna
இராசேந்திரா நினைவு மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் is located in இந்தியா
இராசேந்திரா நினைவு மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம்
இராசேந்திரா நினைவு மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் (இந்தியா)

இராசேந்திரா நினைவு மருத்துவ அறிவியல்  ஆராய்ச்சி நிறுவனம் (Rajendra Memorial Research Institute of Medical Science) என்பது இந்தியாவின் பீகார், பாட்னா, அகம் குவான் என்ற இடத்தில் அமைந்துள்ள மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இது புது தில்லியில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையின் நிரந்தர ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தன்னாட்சி அமைப்பாகும்.[1]

அமைவிடம்

[தொகு]

இது பீகாரில் பட்னா நகரின் கிழக்குப் பகுதியில் அகம் குவான் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் ஒன்பது ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆய்வு

[தொகு]

கலா-அசார், கறுப்புக் காய்ச்சல் மற்றும் டம்டம் காய்ச்சல் என்றும் அழைக்கப்படும் உள்ளுறுப்பு லீஷ்மேனியாசிஸின் பல்வேறு அம்சங்களில் ஆராய்ச்சியே இதன் முக்கியத் திட்டம் ஆகும்.

வரலாறு

[தொகு]

இந்நிறுவனத்திற்கு இந்தியக் குடியரசின் முதல் குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத்தின் நினைவாகப் பெயரிடப்பட்டது. பீகாரில் மார்பு நோயால் பிரசாத் இறந்த பிறகு, இவரது பெயரின் நினைவாக மார்பு நோய்களில் கவனம் செலுத்தும் ஒரு நிறுவனம் நிறுவப்பட்டது. இதன் பின்னர் திசம்பர் 3, 1963-ல் இராசேந்திரா நினைவு மருத்துவ அறிவியல்  ஆராய்ச்சி நிறுவனம் நிறுவப்பட்டது.

அக்டோபர் 2008-ல், இராசேந்திரா நினைவு மருத்துவ அறிவியல்  ஆராய்ச்சி நிறுவனம் கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று செய்து கொண்டது. இதன் மூலம் இராசேந்திரா நினைவு மருத்துவ அறிவியல்  ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களின் ஆய்வு வழிகாட்டியாகக் கல்கத்தா பல்கலைக்கழக பேராசிரியர்கள் செய்யப்படுவார்கள்.

இதன் மூலம், இப்போது பீகார் மாணவர்கள் பாட்னாவில் உள்ள இராசேந்திரா நினைவு மருத்துவ அறிவியல்  ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் போது கல்கத்தா பல்கலைக்கழகத்தின் கீழ் தங்கள் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள விருப்பம் உள்ளது. உள்ளூர் மாணவர்கள் சிறந்த கல்வி நிறுவனங்களுக்காகக் கல்கத்தா அல்லது பிற இடங்களுக்குச் செல்வதைத் தடுக்க இது உதவும்.

சில தசாப்தங்களுக்கு முன்பு, தன்பாத்தின் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களுக்கு மருந்துகளைக் கண்டுபிடிப்பதில் இந்நிறுவனம் குறிப்பிட்ட பணியினை மேற்கொண்டது. மறைந்த மருத்துவர் கர்கிரத் சிங்கால் முன்னோடியாகக் கொண்ட, இந்த நிறுவனம் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் நிமோகோனியோசிக்கு மருந்தைக் கண்டுபிடித்தது. இந்நோய் மூச்சுத்தடை நோய் போன்றது.

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rajendra Memorial Research Institute of Medical Sciences (RMRIMS), Patna". www.indiascienceandtechnology.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-09. {{cite web}}: Text "India Science, Technology & Innovation - ISTI Portal" ignored (help)

வெளி இணைப்புகள்

[தொகு]