இராஜகீழ்ப்பாக்கம் | |
---|---|
இராஜகீழ்ப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 12°55′04″N 80°09′21″E / 12.9177°N 80.1557°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | செங்கல்பட்டு |
ஏற்றம் | 25.88 m (84.91 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 600073[1] |
புறநகர்ப் பகுதிகள் | செம்பாக்கம், மாதம்பாக்கம், மூவரசம்பட்டு, மேடவாக்கம், பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், சேலையூர் |
மக்களவைத் தொகுதி | திருப்பெரும்புதூர் |
சட்டமன்றத் தொகுதி | தாம்பரம் |
இராஜகீழ்ப்பாக்கம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் செங்கல்பட்டு (இதற்கு முன்னர் காஞ்சிபுரம்) மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2][3]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 25.88 மீ. உயரத்தில், (12°55′04″N 80°09′21″E / 12.9177°N 80.1557°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு இராஜகீழ்ப்பாக்கம் அமையப் பெற்றுள்ளது.
தமிழ்நாடு அரசின் தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை திட்டம் மூலம், வாகனங்கள் சென்னை நகருக்கு உள்நுழையவும் மற்றும் சென்னை நகரிலிருந்து வெளியூர்களுக்கு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ள சாலை இராஜகீழ்ப்பாக்கம் வழியாகச் செல்லும்.[4]
ஸ்கந்தாஸ்ரமம் என்ற முருகன் கோயில் ஒன்று இப்பகுதியில் அமைந்துள்ளது.[5] சென்னகேசவ பெருமாள் கோயில் என்ற பெருமாள் கோயில் ஒன்றும் இராஜகீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ளது.[6]
இராஜகீழ்ப்பாக்கம் பகுதியானது, தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[7]