இராஜன் குருக்கள் | |
---|---|
2007இல் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேராசிரியர் இராஜன் குருக்கள் பேசுகிறார் . | |
பிறப்பு | 15 மே 1948கண்ணூர் | , கரியாத்து,
படித்த கல்வி நிறுவனங்கள் | கோழிக்கோடு பல்கலைக்கழகம் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் |
பணி | கேரள மாநில உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவர் வரலாற்றாளர் வேந்தர் (கல்வி) பேராசிரியர் எழுத்தாளர் |
இராஜன் குருக்கள் (Rajan Gurukkal) (பிறப்பு 16 மே 1948) ஓர் முன்னணி இந்தியச் சமூக விஞ்ஞானியும், [1] வரலாற்றாசிரியரும், பேராசிரியரும், எழுத்தாளருமாவார். [2] இவர் பல்வேறு தலைப்புகளில் பல புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.[3] மேலும், தனது படைப்புகளுக்காக விருதுகளையும் பெற்றுள்ளார்.[3]
குருக்கள் பொதுவாக அரசியல் ஆய்வாளர்களால் இடதுசாரி மைய வரலாற்றாசிரியராகக் கருதப்படுகிறார். [4]
புதேன் மாடத்தில் இராஜன் குருக்கள் என்ற பெயருடன் 1948 மே 15 ஆம் தேதி இந்தியாவின் கண்ணூர் மாவட்டத்தில் மாகே அருகே கரியாத்து என்ற ஓர் வடக்கு கேரள கிராமத்தில் பிறந்தார். [3] கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள குருவத்தூரில் உள்ள தனது குடும்பப் பள்ளியிலும், பின்னர் கரியாத்து நம்பியாரின் மேல்நிலைப்பள்ளி, இராமவிலாசம் மேல்நிலைப் பள்ளியிம் படித்தார். தனது பட்டப்படிப்புக்காக மடப்பள்ளி அரசு கல்லூரியிலும், தலசேரி அரசு பிரென்னன் கல்லூரியிலும் சேர்ந்தார். 1972ஆம் ஆண்டில் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்புடனும் முதல் தரத்துடனும் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் கேரளாவின் ஆலுவாவில் உள்ள இயூனியன் கிறித்துவக் கல்லூரியில் சிலகாலம் கற்பித்தார். [5] பின்னர் இவர் 1978ஆம் ஆண்டில் தனது முதுதத்துவமணியையும், 1985ஆம் ஆண்டில்புது தில்லியின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் பட்டம் பெற்றார். பின்னர், பல்கலைகழகத்தின் வரலாற்று ஆய்வுகள் மையத்தின் ஆசிரிய உறுப்பினரானார்.
கேரளாவின் சமூகப் பொருளாதாரம், கலாச்சார வரலாறு, கட்டமைப்பு மானுடவியல், வரலாற்றுச் சமூகவியல், தெற்கு மேற்குத் தொடர்ச்சி மலையின் மனித சூழலியல் என்ற தலைப்புகளில் மலையாளத்தில் ஐந்து புத்தகங்களையும் ஆங்கிலத்தில் ஆறு புத்தகங்களையும் எழுதியுள்ளார். தற்போதைய பிரச்சினைகள் குறித்து பல்வேறு பத்திரிகைகளிலும், செய்தித்தாள்களிலும் எழுதிய இவரது பல கட்டுரைகளைத் தவிர தேசிய மற்றும் சர்வதேச பத்திரிகைகளில் சுமார் 150 ஆய்வுக் கட்டுரைகள் உள்ளன. [3]
{{cite web}}
: |first4=
has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)