இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளூர் மற்றும் பன்னாட்டு சுற்றுலாவாசிகளை கவரும் வரலாற்று சிறப்பு மிக்க அழகிய மலைக்கோட்டைகள், அரண்மனைகள் போன்ற கலை நயமிக்க பண்பாட்டுத் தலங்கள் பல உள்ளது. இராஜஸ்தான் மாநிலத்தின் பல சுற்றுலாத் தலங்கள் தங்க முக்கோணத்தில் அமைந்துள்ளது.[1][2]
ஜெய்ப்பூர் நகர அரண்மனை அரண்மனை, உதயப்பூர் ஏரிகள், தார் பாலைவனத்தில் உள்ள ஜோத்பூர் கோட்டைகள், ஏரிகள் மற்றும் ஜெய்சல்மேர், பிகானேர் கோட்டைகள் வெளிநாட்டவர்களை ஈர்க்கும் இராஜஸ்தானின் முக்கிய சுற்றுலாத்தலங்கள் ஆகும்.
இராஜஸ்தான் மாநிலத்தின் ஆரவல்லி மலைத்தொடர்களில் அமைந்த மலைக்கோட்டைகளும், அரண்மனைகளும் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலாத் தலங்கள் ஆகும்.
இராஜஸ்தான் மாநிலத்தின் ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்த மலைக்கோட்டைகளில் பல உலகப் பாரம்பரியக் களங்களில் இடம் பெற்றுள்ளது.[3]
இராஜஸ்தானின் ஆறு மலைக்கோட்டைகள் உலகப் பாரம்பரியக் களங்களில் இடம் பெற்றுள்ளது.[4][5]