கிங் கோத்தி அரண்மனை | |
---|---|
கிங் கோத்தி அரண்மனையின் நுழைவு வாயில் | |
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | ஐதராபாத் நிசாம்நிசாமுக்குச் சொந்தமானது] |
இடம் | ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா |
நிறைவுற்றது | கமால் கான் |
திறப்பு | 1911 |
உரிமையாளர் | ஐதராபாத் நிசாம் |
கிங் கோதி அரண்மனை (King Kothi Palace) அல்லது நஸ்ரி பாக் அரண்மனை இந்தியாவின் தெலங்காணாவின் ஐதராபாத்தில் உள்ள ஒரு அரண்மனையாகும். ஐதராபாத்து மாநிலத்தின் முன்னாள் ஆட்சியாளர் சர் மிர் உஸ்மான் அலிகான் இங்கு வசித்து வந்தார். [1][2]
ஆரம்பத்தில், நவாப் கமால் கான் என்பவர் தனது தனிப்பட்ட குடியிருப்புக்காக இந்த அரண்மனையை கட்டினார். இதில், பிரதான வாயில், தாழ்வாரங்கள், சாரளங்கள் மற்றும் கதவுகள் "கே.கே" என்ற அடையாளத்துடன் பொறிக்கப்பட்டன. பின்னர் நிசாம் இந்த அரண்மனையை வாங்கியபோது, நவாப்களின் சுருக்கப் பெயரைக் கொண்டிருப்பது தனது பெருமைக்கு எதிராக உணர்ந்தார். அவர் "கே.கே" என்ற சுருக்கத்தை "கிங் கோதி" என்று மாற்றினார். அதாவது ராஜாவின் மாளிகை. இதனால் கிங் கோதி என்ற பெயர் உருவானது. [2][3]
இந்த அரண்மனையை கமால் கான் என்பவர் கட்டியுள்ளார். பின்னர், நிசாம் அரண்மனை மீதான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியதும் அவருக்கு விற்றார். இளம் நிசாம் 13 வயதாக இருந்தபோது இந்த அரண்மனையில் குடியேறினார். 1911இல் அரியணையில் பதவியேற்ற பின்னரும், அவர் தொடர்ந்து அரண்மனையில் தங்கியிருந்தார். தந்தை வசித்த சௌமகல்லா அரண்மனைக்குச் செல்லவில்லை.
பரந்த அரண்மனையில், பல்வேறு வகையான விலையுயர்ந்த பொருட்கள் எஃகு பட்டிகளில் சேமிக்கப்பட்டு, பிரித்தனில் தயாரிக்கப்பட்ட பூட்டுகளுடன் இணைக்கப்பட்டன.[4] இந்த அரண்மனையில் மூன்று முக்கிய கட்டிடங்கள் உள்ளன. அவை இரண்டு நிசாம் பயன்படுத்திய ஒரு பெரிய நூலகமும் இதில் உள்ளது. [5]
நிசாமின் உத்தியோகபூர்வ மற்றும் சடங்கு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்ட கிழக்குப் பகுதி, இப்போது மாநில அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இப்போது சுவராக இருக்கும் மேற்கு பகுதியின் பாதியில், நஸ்ரி பாக் அல்லது முபாரக் மாளிகை என்று அழைக்கப்படும் முக்கிய குடியிருப்பு கட்டிடங்கள் அமைந்துள்ளன. அவை இன்றும் நிசாம்களின் தனிப்பட்டப் பயன்பாட்டில் உள்ளது.
நஸ்ரி பாக் என்ற பிரதான நுழைவாயிலின் குறுக்கே எப்போதுமே ஒரு திரைச்சீலை ஒன்று கட்டப்பட்டிருந்தது. எனவே இது "பர்தா வாயில்" என்று அறியப்பட்டது. நிசாம் அரண்மனையிலிருந்து வெளியே சென்றபோது, நிசாம் வீட்டில் இல்லை என்பதைக் குறிக்க பர்தா தூக்கப்பட்டது. இந்த வாயிலை மைசாரம் படைப்பிரிவு, காவலர்கள், இராணுவம் ஆகியவை காத்து நின்றன. [6] The Nizam lived here until his death in 1967.[2]
அரண்மனை பெரிய வளைந்த நுழைவாயில்கள் மற்றும் நெடுவரிசைகள், விதான சாரளங்களில் சிக்கலான மரவேலைப்பாடுகள், நுழைவாயிலில் ஒரு பெரிய போர்டிகோ ஆகியவற்றால் அமைக்கப்பட்டுள்ளது. [3]
கிங் கோதி வளாகத்தின் மூன்று முக்கிய கட்டிடங்களில், நிசமின் தனித் தோட்டங்களின் (சர்ஃப் இ காஸ்) அலுவலகங்களுக்கு இடமளிக்கும் பிரதான கட்டிடமும் (இப்போது ஒரு மருத்துவமனை உள்ளது), முபாரக் மாளிகை (நஸ்ரி பாக்) மட்டுமே எஞ்சியுள்ளன. எஞ்சியிருக்கும் கட்டிடங்கள் இரண்டும் ஐரோப்பிய பாணியில் உள்ளன.[7]
மூன்றாவது கட்டிடம், உஸ்மான் மேன்ஷன் 1980களின் முற்பகுதியில் இடிக்கப்பட்டது. மாநில அரசால் அந்த இடத்தில் ஒரு புதிய மருத்துவமனைக் கட்டிடம் கட்டப்பட்டது. கடைசியாக ஆண்ட ஏழாம் நிசாம், சர் மீர் உஸ்மான் அலிகான், (1911-1948), இங்கு வாழ்ந்து 1967 பிப்ரவரி 24 அன்று இந்த கட்டிடத்திலேயே இறந்தார்.
இந்த அரண்மனை ஜூடி பள்ளிவாசலின் தாயகமாகவும் உள்ளது. கான் தனது இல்லத்தின் எதிரே இருந்த பள்ளிவாசலில் அடக்கம் செய்ய விரும்பினார். [8]
முபாரக் மாளிகையின் கிழக்கே ஒரு கடிகாரத்துடன் கூடிய 'காடியல் வாயில்' ஒன்று உள்ளது. இதன் வளாகத்தில் பல்வேறு ஐரோப்பிய பாணிகள் உள்ளன. சாரளளும், சிக்கலான மரவேலைப் பாடுகளும், காடியல் வாயிலில் எண்கோண பிரமிடு வடிவ வடிவங்களில் சாய்ந்த ஓடு வேய்த கூரைகள், அரை வட்ட வளைவுகள் ஆகியவை சிறப்பியல்பு அம்சங்களில் அடங்கும்.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)