இராஜேசு குப்தா | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் Member வசீர்பூர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் பிப்ரவரி 2015 | |
முன்னையவர் | முனைவர் மகேந்தர் நக்பால் |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | ஆம் ஆத்மி கட்சி |
இணையத்தளம் | http://rajeshgupta.info |
இராஜேசு குப்தா (Rajesh Gupta) ஒரு இந்திய அரசியல்வாதியும் தில்லியின் ஆறாவது சட்டமன்றத்தின் உறுப்பினரும் ஆவார். இவர் மாநிலத்தில் சுகாதாரத்துறையின் பாராளுமன்றச் செயலாளராகவும் இருக்கிறார். இவர் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் ஆவார். இவர் வசீர்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தில்லி சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
இராஜேசு குப்தா 1978 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி தில்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனையில் பிறந்தார். தியாகி பொதுப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். இளமைப் பருவத்தின் பிற்பகுதியில் இவர் நாடகத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இவர் பொதுவாக தெரு நாடகங்கள் மற்றும் "நுக்கத் நாடகங்கள்" மூலம் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றார். இவர் எப்போதும் வித்தியாசமாக ஏதாவது செய்ய விரும்பினார், அதற்காகப் பங்களிக்கவும் செய்கிறார். ஊழலுக்கு எதிரான இயக்கம் அரசியலில் அவரது வாழ்க்கைக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இவர் காலனி விற்பனைத் தொழிலை விட்டு விட்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.
2011 ஆம் ஆண்டு அண்ணா அசாரே முன்னின்று நடத்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். 2013 தேர்தலின் போது சட்டமன்றத் தேர்தலில் மிகத்தீவர் பிரச்சாரம் செய்தார். 2015 ஆம் ஆண்டு தில்லி சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.
இவர் 2015 தில்லி சட்டமன்றத் தேர்தலில் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் முனைவர் மகேந்தர் நக்பால் என்பவரை 22,044 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
10 பிப்ரவரி 2015 முதல் 2020 வரை இவர் தில்லியின் ஆறாவது சட்டமன்றத்தின் உறுப்பினராக இவர் பணியாற்றினார்.
2020 ஆம் ஆண்டில் இவர் தில்லி ஏழாவது சட்டமன்றத்தின் உறுப்பினராக இவர் பாலம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். [2]