இராஜையா சைமன் (Rajiah Simon) இந்தியாவின் சென்னையில் உள்ள கணித அறிவியல் கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக உள்ளார்.
குவையம் ஒளியியலில் ஆய்வுகளில் சைமன் ஆற்றிய பணிகளுக்காக 1993-ல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது வழங்கப்பட்டது.[1]
டைராக் சமன்பாட்டைப் பயன்படுத்தி ஒரு காந்த நான்முனைவில் கவனம் செலுத்தும் செயலின் மூலம் மின்னூட்ட-துகள் கற்றை ஒளியியல் குவையம் கோட்பாட்டை சைமன் மற்றும் கூட்டுப்பணியாளர்கள் தொடங்கினர்.[2]