இராஜ் பிசாரியா | |
---|---|
பிறப்பு | இலக்கிம்பூர், கெரி, உத்தரப் பிரதேசம், இந்தியா | 10 நவம்பர் 1935
மற்ற பெயர்கள் | இராஜு |
பணி | நாடக இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் கல்வியாளர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | நாடக அரங்கக் கலைகளின் பயிற்சிப் பட்டறையை நிறுவியவர். |
வாழ்க்கைத் துணை | கிரன் ராஜ் பிசாரியா[1] |
வலைத்தளம் | |
www.rajbisaria.com |
இராஜ் பிசாரியா (Raj Bisaria) (பிறப்பு: 1935 நவம்பர் 10) இவர் ஓர் இந்திய இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகரும் மற்றும் கல்வியாளருமாவார். இவரை பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா "வட இந்தியாவில் நவீன நாடகத்தின் தந்தை" என்று விவரித்தது. [2] இவர் நாடக அரங்கக் கலைகளின் பயிற்சிப் பட்டறையை நிறுவினார். 1975 ஆம் ஆண்டில் பார்தெண்டு நாடக அரங்கக் கலை அகாதமி மற்றும் 1980 இல் பார்தெண்டு நாடக அரங்கக் கலை அகாடமியின் ரெபர்டரி நிறுவனம் ஆகியவற்றையும் நிறுவினார். மேலும் இதில் நவீன கலைக் கருத்துக்களை இவர் கலந்துள்ளார்.
ராஜ் பிசாரியா உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் 1935 நவம்பர் 10, அன்று மறைந்த பி.எல் பிசாரியா மற்றும் லீலவதி சிங் ஆகியோரின் மகனாகப் பிறந்தார். லக்னோவின் கொல்வின் தாலுக்தார்ஸ் கல்லூரி மற்றும் லக்னோ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற இவர், லக்னோ பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தின் மூத்த பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். 1969இல், பிசாரியா கிரண் குச்சவானை மணந்தார்; இத்தம்பதியருக்கு ரெஜினா என்ற மகள் உள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ராஜ் பிசாரியா 1966 இல் நாடகக் கலைப் பட்டறையை நிறுவினார். இந்த முயற்சி 1962இல் உருவாக்கப்பட்ட இவரது பல்கலைக்கழக நாடகக் குழுவால் எடுக்கப்பட்டது. [3] நவீன நாடகத்துறையில் பணியாற்றியதற்காகவும், இந்தியாவில் நாடக வளர்ச்சிக்கு இவர் அளித்த பங்களிப்பிற்காகவும் பத்மஸ்ரீ விருது பெற்ற உத்தரபிரதேசத்தின் முதல் மனிதரானார்.
இராஜ் பிசாரியா வட இந்தியாவில் நிகழும் கலைகளின் வியத்தகு மற்றும் நிகழ்த்து கலைகள் மற்றும் அழகியல் விழிப்புணர்வு குறித்து ஒரு புதிய உணர்வைத் தூண்ட முயன்றார். [4] [5]
இராஜ் பிசாரியா வெளிநாடுகளில் நடத்திய நாடகப் பயிற்சிகள் இலண்டனில் உள்ள பிரித்தானிய அமைப்பின் அழைப்பை உள்ளடக்கியது. 1969 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்குச் சென்று பிரித்தன் நாடகச் சங்கத்தில் ஒரு தயாரிப்பாளராகவும், நாடக பயிற்றுவிப்பாளரும் மற்றும் தீர்ப்பளிப்பாளராகவும் பயிற்சி அளித்தார். [6]