இராஜ்ரப்பா அருவி | |
---|---|
சின்னமஸ்தா கோயில் | |
அமைவிடம் | ராம்கர் மாவட்டம், சார்க்கண்டு, இந்தியா |
ஆள்கூறு | 23°37′55″N 85°42′40″E / 23.63194°N 85.71111°E |
ஏற்றம் | 346 மீட்டர்கள் (1,135 அடி) |
மொத்த உயரம் | 9.1 மீட்டர்கள் (30 அடி) |
நீர்வழி | வைரவி ஆறு |
இராஜ்ரப்பா (Rajrappa) என்பது இந்திய மாநிலமான சார்கண்டின், ராம்கர் மாவட்டத்தின் ராம்கர் துணைக் கோட்டத்தில் உள்ள சித்தர்பூர் சிடி வட்டார வளர்ச்சி பகுதியில் உள்ள ஒரு அருவி மற்றும் புனித யாத்திரை தலம் ஆகும்.
இராஜ்ரப்பா 23°37′55″N 85°42′40″E / 23.632°N 85.711°E இல் அமைந்துள்ளது
இராஜ்ரப்பா தாமோதர் மற்றும் பைரவி (உள்ளூரில் பேரா என்று அழைக்கப்படுகிறது) ஆறுகள் ஒன்று சேரும் இடத்தில் அமைந்துள்ளது. [1]
ராஜ்ரப்பா ராம்கர் மற்றும் சாசை இணைக்கும் தே.நெ. 23 இல் அமைந்துள்ளது. இது ராம்கரில் இருந்து 20 கிலோமீட்டர்கள் (12 mi) தொலைவிலும், [2] ஹசாரிபாக்கிலிருந்து 65 கி.மீ (40 மைல்) தொலைவிலும், [3] ராஞ்சியிலிருந்து 70 கி.மீ (43 மைல்) தொலைவிலும், பொகாரோ ஸ்டீல் நகரத்திலிருந்து 68 கி.மீ (42 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. [1]
பேரா அல்லது பைரவி ஆறு தாமோதர் ஆற்றுடன் இணைகிறது. அவ்வாறு இணையும்போது 9.1 மீட்டர்கள் (30 அடி) உயரத்தில் இருந்து விழுகிறது.[1] [4]
இராஜ்ரப்பா அருவி மிகப்பெரிய புவியியல் முக்கியத்துவம் வாய்ந்தது. இராஜ்ரப்பாவில் உள்ள தாமோதர் பள்ளத்தாக்கு இரண்டு அடுக்கு பள்ளத்தாக்கால் வகைப்படுத்தப்படும் பாலிசைக்ளிக் பள்ளத்தாக்கு இராஞ்சி பீடபூமியில் இருந்து வரும் பேரா ஆறு தாமோதர ஆற்றுடன் சேரும் போது ஒரு அருவியை உருவாக்குகிறது. இதனால் தொங்கும் பள்ளத்தாக்கிற்குன ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. இராஜ்ரப்பாவிற்கு அருகில் உள்ள தாமோதர் பள்ளத்தாக்கு ஆற்றுவளைவு வெட்டுப்பள்ளத்துக்கு ஒரு பொதுவான எடுத்துக்காட்டு ஆகும். [5]
இராஜ்ரப்பா ஒரு இந்து புனித யாத்திரை தலமாகும். இங்கு தினமும் 2,500-3,000 நபர்கள் வரை வருகின்றனர்.[3] இங்கு அமைந்துள்ள சின்னமஸ்தா (சின்னமஸ்திகா என்றும் அழைக்கப்படுகிறது) கோயில் முக்கிய இடமாகும். இக் கோயிலில் உள்ள சின்னமஸ்தா தேவி தலை வெட்டப்பட்ட நிலையில் தாமரை படுக்கையில் காமதேவன் மற்றும் இரதியின் உடலின் மேல் நிற்கிறார். சின்னமஸ்தா கோவில் அதன் தாந்திரிக பாணி கட்டிடக்கலை வடிவமைப்பிற்காக மிகவும் பிரபலமானது. கோவில் மிகவும் பழமையானது, ஆனால் பிற்காலத்தில் புதியதாக கட்டபட்டது. [6] முதன்மைக் கோயிலைத் தவிர, சூரியன், சிவன் போன்ற பல்வேறு கடவுள்களுக்கு பத்து கோயில்கள் இங்கு உள்ளன.[2] இன்றும் கோவிலில் விலங்கு பலி நடைமுறையில் உள்ளது. செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளிலும் காளி பூஜையின் போதும் பலி கொடுக்கப்படுகிறது. [7]
இராஜ்ரப்பா சந்தாலிகள் மற்றும் பிற பழங்குடியினருக்கு ஒரு புனிதத் தலமாக உள்ளது. அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் அஸ்தியை தாமோதர ஆற்றில் கரைக்க வருகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் திசம்பர் மாதத்தில் யாத்ரி என்ற குழுக்களாக வருகிறார்கள். அவர்களின் தொன்மங்களிபடி, இது அவர்களின் இறுதி இளைப்பாறும் இடம். அவர்களின் நாட்டுப்புற பாடல்களில் ராஜ்ரப்பாவை "தெல் கோபி காட்" (தண்ணீர் மலையிடைவழி) என்று குறிப்பிடுகிறார்கள், மேலும் அவர்கள் இங்கு குளித்த பிறகு எண்ணெயைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் கணிசமான எண்ணிக்கையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் தெற்கு பகுதிகளான கிழக்கு மற்றும் மேற்கு சிங்பூம் மற்றும் சரைகேலா மாவட்டங்களில் இருந்து இங்கு வருகின்றனர்.
பரவலர் பண்பாட்டில், புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் சத்யஜித் ரேயின் வங்க மொழி புதினமான ஃபெலுடா தொடரின் " சின்னமஸ்டர் அபிஷப் " துப்பறியும் கதையில் சின்னமஸ்தா இடம்பெற்றுள்ளது.
இராஜ்ரப்பா காவல் நிலையம் சித்தர்பூர் சிடி வட்டார வளர்ச்சி பிரிவில் செயல்படுகிறது. [8]
இராஜ்ரப்பா பகுதி இல் இந்தியா நிலக்கரி நிறுவனத்தின் துணை நிறுவனமான மத்திய நிலக்கரி வயல்கள் நிறுவனத்தின் நிலக்கரி வயல் அமைந்துள்ளது. இது இப்பகுதியில் உள்ள மிகப்பெரிய நிலக்கரி வயல்களில் ஒன்றாகும். பிரதான குவாரி (ஒரு பெரிய திறந்தவெளி சுரங்கம்), அலுவலகங்கள், குடியிருப்புகள், பொழுதுபோக்கு வசதிகள், வணிக வளாகங்கள், ஒரு துணைக் காவல் நிலையம், பொது பயன்பாட்டு கட்டிடங்கள் ஆகியவற்றைக் கொண்ட இது ராஜ்ரப்பா திட்டம் என்று பரவலாக அறியப்படுகிறது. இது ஒரு முழுமையான நகரியமாகும்.[7]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
வெளி ஒளிதங்கள் | |
---|---|
Rajrappa or Chhinnamasta temple | |
Floods at Rajrappa |