இராணி சித்ரலேகா போன்சுலே

இராணி சித்ரலேகா போன்சுலே
Rani Chitralekha Bhonsle
நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதிராம்டேக்கு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சித்ரலேகா கதம்

( 1941-02-26)26 பெப்ரவரி 1941
இறப்பு( 2015-08-16)16 ஆகத்து 2015
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்(கள்)இராசா தேச்சிங்கராவ் போன்சலே, நாக்பூர்
பெற்றோர்
  • சரசு சந்திர கதம் (தந்தை)
தொழில்உழவர், அரசியல்வாதி, சமூகப்பணி, கல்வி

இராணி சித்ரலேகா போன்சுலே (Rani Chitralekha Bhonsle) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1941 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். சமூக சேவகரான இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக இந்திய மாநிலமான மகாராட்டிராவில் உள்ள ராம்டெக்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] [2]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

போன்சுலே 1941 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் உள்ள பரோடாவில் பிறந்தார். அவர் 25 டிசம்பர் 1959 ஆம் ஆண்டு திசம்பர் 25 ஆம் தேதியன்று தேச்சிங்ராவு போன்சுலேவை மணந்து கொண்டார். இத்தம்பதியருக்கு இலட்சுமன்சிங் மற்றும் மான்சிங் ஆகிய இரு மகன்களும், இலலிதராச்சே, மென்கராச்சே மற்றும் கேட்கிராச்சே ஆகிய மூன்று மகள்களும் உள்ளனர். [1]

கல்வி மற்றும் ஆர்வங்கள்

[தொகு]

இராணி தனது இளங்கலை படிப்பை குசராத்து மாநிலம் பரோடாவில் உள்ள எம்.எசு. பல்கலைக்கழகம் சகாச்சிராவ் கெய்க்வாட் கல்லூரியில், முடித்தார். இவரது ஆர்வங்களில் ஓவியம் மற்றும் வாசிப்பு ஆகியவை அடங்கும். நாக்பூரில் உள்ள மாவட்ட கைப்பந்து சங்கத்தின் தலைவராகவும் இவர் உள்ளார். [1]

தொழில்

[தொகு]

இராணி போன்சுலே 1998 ஆம் ஆண்டில் 12ஆவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998-99 காலகட்டத்தில், நிலக்கரி அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்தார். [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "Biographical Sketch Member of Parliament 12th Lok Sabha". பார்க்கப்பட்ட நாள் 17 February 2014.
  2. "राणी चित्रलेखा भोसले यांचे निधन". Archived from the original on 2018-03-08. பார்க்கப்பட்ட நாள் 2018-03-07.