இராணி விஜயா தேவி

இராணி விஜயா தேவி (Rani Vijaya Devi) என்பவர் கோட்டா-சங்கனியின் (28 ஆகத்து 1922 - 8 திசம்பர் 2005), மகாராஜகுமாரி விஜயலட்சுமி அம்மன்னியில் பிறந்தவர். இவர் யுவராஜா கண்டீரவ நரசிம்ம ராஜ உடையாரின் மூத்த மகளும் மகாராஜா ஜெய சாம்ராஜ உடையாரின் சகோதரியும் ஆவார்.[1]

தேவி தந்தையின் அரண்மனையான சாமுண்டி விகாரில் வளர்ந்தார். இவர் நல்ல மேய்ப்பர் பள்ளியில் கன்னியாஸ்திரீகளிடமிருந்து பியானோ வாசிக்கக் கற்றுக்கொண்டார். பின்னர் மைசூர் சென்றிருந்த இலண்டன் டிரினிட்டி கல்லூரியின் ஆல்பிரட் மிஸ்டோவ்ஸ்கியிடமும் பியானோ கற்றுக்கொண்டார்.[2] வீணை வெங்கடகிரியப்பாவிடம் வீணை வாசிக்கவும் கற்றுக்கொண்டார். 1939ஆம் ஆண்டில், தனது தந்தையுடன் ஐரோப்பா சுற்றுப்பயணத்தில், இவர் செர்ஜி ராச்மானினோப்பை சந்தித்தார்.

தேவி 1941-ல் கோட்டா-சங்கனியின் இளவரசரை மணந்தார். இவர் 1947-ல் இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்த தனது கணவருடன் நியூயார்க் சென்றார். இவர் எட்வார்ட் ஸ்டீவர்மனின் கீழ் ஜூலியார்ட் இசைப் பள்ளியில் இசைப் பயின்றார்.

பெங்களூரில் பன்னாட்டு இசை மற்றும் கலை சங்கத்தை நிறுவினார்.[2] இச்சங்கத்தின் கடந்தகால புரவலர்களில் கர்நாடக ஆளுநர்களான ருக்மணி தேவி அருண்டேல், சோ. மா.கிருசுணா மற்றும் ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் ஆகியோர் முக்கியமானவர்கள்.

தேவிக்கு, கீதா தேவி நாத், உஷா தேவி மாளவி, ஊர்மிளா தேவி மற்றும் சகுந்தலா தேவி என நான்கு மகள்களும் அக்ஷய் மாளவி, பிரியம் மாளவி, உதய நாத், ஹனுமந்த் நாத் மற்றும் அனிஷா தாராபோர்வாலா என ஐந்து பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

தேவி 8 திசம்பர் 2005 அன்று பெங்களூரில் இறந்தார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 . 10 January 2006. 
  2. 2.0 2.1 Sardana, Nikhil (1 December 2016). "Urmila Devi Kotda Sangani - Organising Secretary, International Music & Arts Society". Serenade. பார்க்கப்பட்ட நாள் 5 December 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]