இராணியின் படிக்கிணறு (Raniji ki Baori, also "Queen's stepwell") இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் பூந்தி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான பூந்தி நகரத்தில் உள்ளது. பூந்தி இராச்சியத்தின் சோலாங்கி வம்சத்தின் மறைந்த மன்னர் அனிருத் சிங்கின் இளைய இராணி நாதவதி மற்றும் அவரது மகன் இராஜா புத்தி சிங்கால் 1699-ஆம் ஆண்டில் இந்த படிக்கிணறு நிறுவப்பட்டது. இப்படிக்கிணறு 46 மீட்டர் ஆழம் கொண்ட இப்படிக்கிணறு, பல மாடிகளுடனும், அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட தூண்களாலும் வடிவமைக்கப்பட்டது.