இராதிகா ராய் | |
---|---|
பிறப்பு | இராதிகா தாஸ் 7 மே 1949 கொல்கத்தா, இந்தியா |
பணி | இணை நிறுவனர், இணை- இயக்குநர் என்டிடிவி |
வாழ்க்கைத் துணை | பிரணாய் ராய் |
பிள்ளைகள் | 1 |
உறவினர்கள் | பிருந்தா காரத் (சகோதரி) |
இராதிகா ராய் (Radhika Roy) (பிறப்பு 7 மே 1949) இராதிகா தாஸ் எனவும் அறியப்படும் இவர் ஓர் இந்திய பத்திரிகையாளரும் புது தில்லி தொலைக்காட்சியின் (என்.டி.டி.வி) இணை நிறுவனரும் ஆவார்.[1][2] அச்சு பத்திரிகைத் துறையில் பத்து வருட வாழ்க்கையைத் தொடர்ந்து,[3] இவர் 1987இல் தொலைக்காட்சிக்கு மாறினார். பின்னர், என்.டி.டி.வியை இணைந்து நிறுவி 25 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தினார்.[4] இவரையும் இவரது கணவர் பிரணாய் ராய் ஆகிய இருவரையும் என்.டி.டி.வியில் நிர்வாக பதவிகளை வகிக்க 2 ஆண்டுகள் தடை செய்து இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) உத்தரவு பிறப்பித்தது. வாரியம் நடத்திய விசாரணையில், கடன் ஒப்பந்தங்கள் தொடர்பான தகவல்களை இவர்கள் தடுத்து நிறுத்தியதாக குற்றம் சாட்டியது .
14 சூன் 2019 அன்று, இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். "தாங்கள் இயக்குநர் பதவியில் இருந்து விலகவும், என்.டி.டி.வி-யில் எந்த நிர்வாக பதவிகளையும் வகிக்கக் கூடாது என்ற செபியின் உத்தரவை மதிக்கவும் செய்வதாகவும், ஆனால் செபியின் இந்த முடிவு தவறான மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது என்றும் மிகவும் அசாதாரணமான மற்றும் விபரீதமானதாகும் உத்தரவாகும். " என்றனர்.[5][6][7]
இவர், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அச்சு இதழியல் துறையில் பணியாற்றினார். இதில் இந்தியன் எக்சுபிரசு மற்றும் இந்தியா டுடே போன்ற வெளியீடுகளும் உள்ளன.[8]
இவர், தான் வெல்ஹாம் பெண்கள் பள்ளியில் படித்தபோது சந்தித்த பிரணாய் ராயை திருமணம் செய்து கொண்டார்.[9] இவர்களுக்கு தாரா ராய் என்ற மகள் உள்ளார்.[10]
இவரது சகோதரி பிருந்தா காரத் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் முடிவெடுக்கும் உயர்ந்த அமைப்பான செயற்குழு உறுப்பினராக உள்ளார்.[11]
தூர்தர்ஷனை மேம்படுத்தும் நிகழ்வில் என்டிடிவி மோசடி செய்ததாக அதன் நிர்வாக இயக்குநர் ராய் மீது சி.பி.ஐ 1998இல் குற்றச்சதி வழக்கு ஒன்றைப் பதிவு செய்தது.[12] சூலை 2013 இல், சிபிஐ மூலம் இவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் சம்பந்தப்பட்ட எல்லா குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்தது.[13][14]
Radhika Roy is the guiding force behind NDTV and has been responsible for leading NDTV's tremendous growth since inception.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)