இரானாவ் (P179) மலேசிய மக்களவைத் தொகுதி சபா | |
---|---|
Ranau (P179) Federal Constituency in Sabah | |
இரானாவ் மக்களவைத் தொகுதி (P179 Ranau) | |
மாவட்டம் | இரானாவ் மாவட்டம் மேற்கு கரை பிரிவு பெலுரான் மாவட்டம் சண்டக்கான் பிரிவு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 66,517 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | இரானாவ் மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | இரானாவ்; சண்டக்கான்; பெலுரான் |
பரப்பளவு | 3,891 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 2003 |
கட்சி | சபா மக்கள் கூட்டணி |
மக்களவை உறுப்பினர் | ஜோனாதன் யாசின் (Jonathan Yasin) |
மக்கள் தொகை | 86,084 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2004 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
இரானாவ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Ranau; ஆங்கிலம்: Ranau Federal Constituency; சீனம்: 兰瑙国会议席) என்பது மலேசியா, சபா மாநிலத்தின், மேற்கு கரை பிரிவு; சண்டக்கான் பிரிவு} ஆகிய பிரிவுகளில், இரானாவ் மாவட்டம்; பெலுரான் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P179) ஆகும்.[5]
இரானாவ் மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
2004-ஆம் ஆண்டில் இருந்து இரானாவ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
இரானாவ் மாவட்டம் என்பது சபா மாநிலம், மேற்கு கரை பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் இரானாவ் நகரம்.[7] சபா மாநிலம் முன்பு பிரித்தானிய வடக்கு போர்னியோ என்று அழைக்கப்பட்டது.
இரானாவ் நகரம்ம் கோத்தா கினபாலு மாநகரத்திற்கு கிழக்கே 108 கி.மீ. (67 மைல்); சண்டக்கான் நகரத்திற்கு மேற்கே 227 கி.மீ. (141 மைல்) தொலைவில் உள்ளது. இரானாவ் மாவட்டம் முற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட மாவட்டம் ஆகும்.
இரானாவ் மாவட்டம் அதன் மலைப்பாங்கான புவியியல் அமைப்பிற்காகப் பெயர் பெற்றது. சபா மாநிலத்தில், இந்த மாவட்டம்தான் அதிகமான மலையகக் காய்கறிகளை உற்பத்தி செய்கிறது.[8]
கடல் மட்டத்தில் இருந்து 1,176 மீட்டர் உயரத்தில் இருப்பதால், சுற்றுலாத் துறையும்; மேட்டு நில வேளாண்மையும் முக்கிய தொழில்களாக உள்ளன. 2010-ஆம் ஆண்டுகளிலேயே, அதன் சுற்றுலாத் தலங்கள் அரை மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளன.
இரானாவ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (2004 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
இரானாவ் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
11-ஆவது மக்களவை | P179 | 2004-2008 | பெர்னார்ட் கிலுக் தும்போக் (Bernard Giluk Dompok) |
பாரிசான் நேசனல் உப்கோ |
12-ஆவது மக்களவை | 2008-2013 | சிரிங்கான் குபாட் (Siringan Gubat) | ||
13-ஆவது மக்களவை | 2013-2018 | இவோன் இபின் (Ewon Ebin) | ||
14-ஆவது மக்களவை | 2018-2020 | ஜோனாதன் யாசின் (Jonathan Yasin) |
பாக்காத்தான் அரப்பான் (மக்கள் நீதிக் கட்சி) | |
2020–2022 | சபா மக்கள் கூட்டணி (பெர்சத்து) | |||
15-ஆவது மக்களவை | 2022 | |||
2022–தற்போது வரையில் | சபா மக்கள் கூட்டணி (சுயேச்சை) |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
ஜோனாதன் யாசின் (Jonathan Yasin) | சபா மக்கள் கூட்டணி (GRS) | 22,606 | 53.44 | 53.44 | |
தவிக் டாலான் (Taufik Dahlan) | பாக்காத்தான் (PH) | 11,514 | 27.22 | 17.95 ▼ | |
இவோன் இபின் (Ewon Ebin) | சபா ஐக்கிய மக்கள் கட்சி (PBRS) | 4,254 | 10.06 | 10.06 | |
மார்க்கோஸ் சித்தோன் (Markos Siton) | சபா பாரம்பரிய கட்சி (Heritage) | 2,657 | 6.28 | 6.28 | |
அசிசுல் சுலிரின் (Azizul Julirin) | தாயக இயக்கம் (GTA) | 1,267 | 3.00 | 3.00 | |
மொத்தம் | 42,298 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 42,298 | 98.80 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 513 | 1.20 | |||
மொத்த வாக்குகள் | 42,811 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 66,517 | 63.59 | 13.98 ▼ | ||
Majority | 11,092 | 26.22 | 22.95 | ||
சபா மக்கள் கூட்டணி கைப்பற்றியது | |||||
மூலம்: [10] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)