தனிநபர் தகவல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | இசுஸ்ட்ரூட், இங்கிலாந்து | 26 மே 1961||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | 11 ஏப்ரல் 2018 ஓக்லாந்து | (அகவை 56)||||||||||||||||||||||||||||||||||||||||||||||
விளையாட்டு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாடு | ![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
விளையாட்டு | இணை ஒலிம்பிக் தடகளப்போட்டிகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மாற்றுத்திறன் வகைப்பாடு | பி1 / டி11 வகைப்பாடுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
இராபர்ட் மேத்யூஸ் (Robert Matthews) (பிறப்பு: 1961 மே 26 - இறப்பு: 2018 ஏப்ரல் 11) இவர் ஓர் பிரித்தானிய விளையாட்டு வீரராவார். பார்வைக் குறைபாடுள்ள இவர் நடுத்தர போட்டிகளிலும், நீண்ட தூர நிகழ்வுகளிலும் போட்டியிட்டார். ஏழு இணை ஒலிம்பிக் போட்டிகளில் எட்டு தங்கப் பதக்கங்களை வென்ற இவர், ஒரு "சின்னமான தடகள வீரர்" என்று குறிப்பிடப்படுகிறார்.
இவர் இங்கிலாந்தின் கென்டில் பிறந்தார்.[1] இவருக்கு தனது தந்தையிடமிருந்து மரபணு ரீதியாக கண் பார்வை குறைபாடு ஏற்பட்டது.[2] இவருக்கு 11 வயதாக இருந்தபோது இவரது பார்வையில் குறிப்பிடத்தக்க சிரமங்கள் ஏற்படத் தொடங்கின.[3] மேலும்,18 வயதிற்குள் தனது பார்வையை முற்றிலும் இழந்துவிட்டார். இவர் 13 வயதிலிருந்தே ஓரளவு பார்வையுடன் இருக்கும்போது ஒரு பள்ளியில் பயின்றார். பின்னர், பார்வையற்றோருக்கான கல்லூரியில்] படித்தார். 1993 ஆம் ஆண்டில், பார்வையற்றோருக்கான வழிகாட்டி நாய்கள் சங்கத்தில் பணியாற்ற இவர் இலீமிங்டனுக்கு சென்றார்.
இவரது முதல் மனைவி, காத், நவம்பர் 2003இல், தனது 38 வயதில் திடீரென இறந்தார்.[4] மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் நியூசிலாந்தில் விடுமுறைக்குச் சென்றிருந்தபோது, சாரா கெர் என்பவரைச் சந்தித்தார். அதன்பிறகு அவருடன் இவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்று நாட்டிற்குத் திரும்பினார்.[5][6] இத்தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன.[1]
1987 ஆம் ஆண்டில், பிரிட்டிசு பேரரசின் ஆணைக்குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்ட முதல் இணை ஒலிம்பியன் ஆனார். 2001 ஆம் ஆண்டில் வார்விக் பல்கலைக்கழகத்திலிருந்தும், 2006 இல் வொர்செஸ்டர் பல்கலைக்கழகத்திலிருந்தும் இவருக்கு கலை பட்டங்களின் கௌரவ முதுகலை வழங்கப்பட்டது.[7] 2004 ஆம் ஆண்டில் பிபிசி மிட்லாண்ட்ஸ் ஹால் ஆஃப் ஃபேமில் இவர் சேர்க்கப்பட்டார்.[8]
இவர் ஒரு விளையாட்டு-உடற்பிடிப்பு சிகிச்சையாளராகவும், ஊக்கமளிக்கும் பேச்சாளராகவும் இருந்தார் . இவரது சுயசரிதையான ரன்னிங் பிளைண்ட் 2009 இல் வெளியிடப்பட்டது.[9] 2014 ஆம் ஆண்டின் வெளியான பிளைண்ட் ஆம்பிஷன் என்ற திரைப்படத்தின் எழுத்தளர் 1988 ஆம் ஆண்டு இணை ஒலிம்பிக்கில் மேத்யூசின் செயல் திறன் தனது கதைக்கு உத்வேகம் அளித்ததாகக் கூறினார். கண்பார்வையற்றவர் எவ்வாறு இயங்குகிறார் என்பதை நடிகர் ராப்சன் க்ரீனுக்கு இவர் உதவினார். மேலும் படத்தில் ஒரு சிறிய பாத்திரமாகவும் இருந்தார்.[10] இவருக்கு 2017இல் மூளைக் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.[11] 2018 ஏப்ரல்11 அன்று இறந்தார்.[12]
இவர் 1984 இல் முதன்முதலில் இணை ஒலிம்பிக்கில் இசுடோக் மாண்டேவில்லி / நியூ யார்க்கு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றார். இவர் பி 1 வகுப்பு நடுத்தர, நீண்ட தூர நிகழ்வுகளில் தொடங்கினார். 800மீ, 1,500மீ, 5,000 மீ ஆகிய மூன்று பிரிவுகளிலும் தங்கம் வென்றார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சியோலில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில், இவர் மூன்று பட்டங்களையும் தக்க வைத்துக் கொண்டார். இவர் 1992இல் மீண்டும் 5,000மீட்டரை வென்றார். 800மீட்டரில் ஒரு வெள்ளியும், 1,500மீட்டரில் வெண்கலமும் பெற முடிந்தது. இது இவரது பதக்கத்தை 13 ஆகக் கொண்டு வந்தது. அவற்றில் எட்டு தங்கங்கள் அடங்கியது.[13]
இவர் 22 உலக சாதனைகளை முறியடித்தார். மேலும் ஆறு உலகப் போட்டிகள்லும், 15 ஐரோப்பியப் போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களை வென்றார்.[14] 1986 ஆம் ஆண்டில், 800 மீட்டர் ஓட்டத்தில் இரண்டு நிமிடம் பின்தங்கி இரண்டாவதாக வந்து, தனது சொந்த உலக சாதனையை முறியடித்தார்.[15] இணை ஒலிம்பிக் போட்டிகளுக்கான இலண்டன் 2012 வழிகாட்டியில் எட்டு "சின்னமான விளையாட்டு வீரர்களில்" ஒருவராக இவர் பட்டியலிடப்பட்டார்.[16]
2004 ஆம் ஆண்டு ஏதென்ஸில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லத் தவறியதாலும், 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் விளையாட்டுக்கு தகுதி பெறத் தவறியதாலும், 1,500 மீட்டரில் புதிய நியூசிலாந்து சாதனை படைத்த போதிலும், தடகளத்திலிருந்து ஓய்வு பெற்றார்.[13][17][18] பின்னர் இவர் ஒரு புதிய விளையாட்டில் கவனம் செலுத்தத் தொடங்கினார். நியூசிலாந்தின் பிரதிநிதியாக இலண்டனில் நடந்த 2012 இணை ஒலிம்பிக் போட்டிகளில் பார்வை இழந்தோருக்கான மிதிவண்டி ஓட்டுதல் போட்டிகளில் பங்கேற்றார்.[19] 2009 முதல் ஒரு முத்தரப்பு வீரராக நியூசிலாந்தை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[12][20]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)