தர்சனகலாநிதி பரிக்சித் தம்புரான் (Darsanakalanidhi Parikshith Thampuran) (இறப்பு: 1964)கொச்சி சுதேச அரசின் கடைசி அதிகாரப்பூர்வ ஆட்சியாளராக இருந்தார். [1] சூலை 1, 1949 இல், திருவிதாங்கூரும் கொச்சியும் இணைந்து திருவிதாங்கூர்-கொச்சின் மாநிலம் உருவானது. இராச்சியத்தின் ஆட்சியும் முடிவுக்கு வந்தது. இவர் ஒரு வருட காலத்திற்கு இராச்சியத்தை ஆட்சி செய்தார். பின்னர் இவர் கொச்சியின் வல்லிய தம்புரானாக தொடர்ந்தார்.
தம்புரான் சிறந்த சமசுகிருத அறிஞராக இருந்தர். [2] இவர் பிரகலாதசரிதா போன்ற பல சமசுகிருத காவ்யத்தையும் எழுதினார். இவர் நியாயம் மீது நம்பிக்கைக் கொண்டவர். மேலும், பல இலக்கிய படைப்புகளுக்கு வர்ணனைகளையும் எழுதியதைத் தவிர, அசல் சமசுகிருத படைப்புகளையும் இயற்றியுள்ளார்.
இவர் இராமவர்மன் அல்லது குஞ்சுன்னி தம்புரான் என்றும் அழைக்கப்பட்டார். 1876 ஆம் ஆண்டில் ஓட்டூர் மாளிகையின் இராமன் நம்புதிரி மற்றும் மங்கு தம்புராட்டியின் மகனாகப் பிறந்தார்.திருச்சூர் இட்டியானாத் குடும்ப வில்லாடத்தைச் சேர்ந்த இட்டியானாத் மாதத்தில் மாதவி என்பவரை மணந்தார்.
இவர் 1964 இல் திருப்பூணித்துறையில் இறந்தார்.