रामग्राम नगरपालिका | |
![]() | |
ஆள்கூறுகள் | 27°29′52″N 83°40′52″E / 27.49778°N 83.68111°E |
---|---|
இடம் | பராசி, நவல்பராசி மாவட்டம், மாநில எண் 4 |
வகை | தூபி |
கட்டுமானப் பொருள் | செங்கல் மற்றும் களிமண் |
நீளம் | 50 மீட்டர்கள் (160 அடி)[1] |
அகலம் | 50 மீட்டர்கள் (160 அடி)[1] |
உயரம் | 6.85 மீட்டர்கள் (22.5 அடி)[1] |
துவங்கிய நாள் | கிமு 483 [2] |
முடிவுற்ற நாள் | கிமு 483[2] |
அர்ப்பணிப்பு | கௌதம புத்தர் |
இராமகிராம தூபி (Ramagrama stupa) (நேபாளி: रामग्राम नगरपालिका, கௌதம புத்தர் நினைவாக, நேபாள நாட்டின் மாநில எண் 4ல் உள்ள நவல்பராசி மாவட்டத்தில் உள்ள இராமகிராமம் எனும் நகரத்தில் கிமு 483ல் எழுப்பப்பட்ட நினைவுத் தூபியாகும்.
பௌத்த யாத்திரைத் தலங்களில் ஒன்றான இராமகிராமத் தூபியை உலகப் பராம்பரியக் களங்களின் தற்காலிக பட்டியலில் 23 மே 1996 அன்று யுனெஸ்கோ அறிவித்துள்ளது.[3] [3]
கௌதம புத்தரின் பெற்றோர்,. தந்தை சுத்தோதனர் சாக்கிய குலத்தவராவர். தாய் மாயாதேவி கோலிய குலத்தை சார்ந்தவர். இவ்விரு குலங்களும், மகா ஜனபதமான கோசல நாட்டின் சிற்றரசர்கள் ஆவர்
கௌதம புத்தர் பரிநிர்வாணம் அடைந்த பின்னர், அவரது உடலை எரித்துக் கிடைத்த சாம்பல் மற்றும் எலும்புகளைச் சேமித்து, பிரித்து, பல நாடுகளுக்கு அனுப்பி, அதனை புத்தரின் புனிதப் பொருளாகக் கொண்டு, அதன் மீது 8 மகா ஜனபத நாடுகளின் தலைநகரஙகளுக்கு அருகில், புத்தரின் நினைவுத் தூபிகள் எழுப்பப்பட்டது.[4] எட்டு தூபிகளின் விவரம்:
கௌதம புத்தர் இறந்து முன்னூறு ஆண்டுகளுக்குப் பின்னர், அசோகர் ஆட்சிக் காலத்தில், கௌதம புத்தரின் நினைவுத் தூபிகளில், ஏழு தூபிகளை மட்டும் திறந்து, அதனடியில் வைக்கப்பட்டிருந்த கௌதம புத்தரின் புனித எலும்புகள், சாம்பல், முடிகள், பற்கள் மற்றும் மண் மட்டும் ஒன்றுசேர்த்து, பின் அவைகளை பல பகுதிகளாகப் பிரித்து, மௌரியப் பேரரசின் முக்கிய இடங்களில் கௌதம புத்தர் நினவாக நூற்றுக் கணக்கான புதிய தூபிகள் எழுப்பப்பட்டது.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link)