இராமசாமி பழனிச்சாமி YB P. Ramasamy | |
---|---|
![]() | |
பினாங்கு துணை முதலமைச்சர் | |
பதவியில் 13 மார்ச் 2008 – 13 ஆகஸ்டு 2023 | |
ஆளுநர் | அப்துல் ரகுமான் அப்பாஸ் (2008–2021) அகமத் புஜி அப்துல் ரசாக் (2021–2023) |
முன்னையவர் | அப்துல் ரசீத் அப்துல்லா |
பின்னவர் | ஜக்தீப் சிங் தியோ |
தொகுதி | பிறை சட்டமன்றத் தொகுதி |
பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் (மாநில பொருளாதார திட்டமிடல், கல்வி, மனித வளம், அறிவியல், தொழில்நுட்பக்குழு) | |
பதவியில் 13 மார்ச் 2008 – 13 ஆகஸ்டு 2023 | |
தொகுதி | பிறை சட்டமன்றத் தொகுதி |
பத்து காவான் மக்களவைத் தொகுதி | |
பதவியில் 8 மார்ச் 2008 – 5 மே 2013 | |
முன்னையவர் | உவான் செங் குவான் (மலேசிய மக்கள் இயக்கக் கட்சி – பாரிசான் நேசனல்) |
பின்னவர் | கஸ்தூரி பட்டு (ஜனநாயக செயல் கட்சி – பாக்காத்தான் ராக்யாட்) |
பெரும்பான்மை | 9,485 (2008) |
பிறை சட்டமன்றத் தொகுதி | |
பதவியில் 8 மார்ச் 2008 – 12 ஆகஸ்டு 2023 | |
முன்னையவர் | குப்புசாமி (மலேசிய இந்திய காங்கிரசு – பாரிசான் நேசனல்) |
பெரும்பான்மை | 5,176 (2008) 7,159 (2013) 9,049 (2018) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ராமசாமி பழனிசாமி 10 மே 1949[1] சித்தியாவான், பேராக், மலேசியா) |
குடியுரிமை | மலேசியர் |
அரசியல் கட்சி | ஜனநாயக செயல் கட்சி (DAP) (2005–2023) மலேசியர் உரிமைகளுக்கான ஐக்கியக் கட்சி (URIMAI) (2023 முதல்) |
பிற அரசியல் தொடர்புகள் | பாக்காத்தான் ராக்யாட் (PR) (2008–2015) பாக்காத்தான் அரப்பான் (PH) (2015–2023) |
வாழிடம் | பினாங்கு |
முன்னாள் மாணவர் | இந்தியானா பல்கலைக்கழகம் மக்கில் பல்கலைக்கழகம் மலாயா பல்கலைக்கழகம் |
பணி | அரசியல்வாதி |
இணையத்தளம் | www |
இராமசாமி பழனிச்சாமி (ஆங்கிலம்; மலாய்: Ramasamy Palanisamy; சீனம்: 拉马沙米) மலேசியாவின் பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வரும்; ஜனநாயக செயல் கட்சியின் பினாங்கு பிறை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்; பாக்காத்தான் ராக்யாட் (PR) மற்றும் பாக்காத்தான் அரப்பான் (PH) ஆகியவற்றின் பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும்; மற்றும் ஜனநாயக செயல் கட்சியின் துணை பொதுச் செயலாளரும் ஆவார்.
மார்ச் 2008 முதல் ஆகஸ்டு 2023 வரை பினாங்கு பிறை சட்டமன்றத் தொகுதியின் (MLA) சட்டமன்ற உறுப்பினராகச் சேவை செய்தவர்; மற்றும் மார்ச் 2008 முதல் மே 2013 வரை பத்து காவான் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக (MP) பணியாற்றியவர்.
மார்ச் 2008 முதல் ஆகஸ்டு 2023 வரை பினாங்கு பிறை சட்டமன்றத் தொகுதியின் (MLA) சட்டமன்ற உறுப்பினராகச் சேவை செய்தவர்; மற்றும் மார்ச் 2008 முதல் மே 2013 வரை பத்து காவான் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக (MP) பணியாற்றியவர். அவரின் அரசியல் வாழ்க்கையின் பெரும்பகுதியில், பாக்காத்தான் அரப்பான் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளான பாக்காத்தான் ராக்யாட் மற்றும் ஜனநாயக செயல் கட்சியின் உறுப்பினராக இருந்துள்ளார்.
அவரின் சாகிர் நாயக் பற்றிய குரல் கருத்துக்கள்; நரேந்திர மோதி ஆட்சியின் கீழ் இந்தியாவில் இந்து தேசியவாதக் கொள்கைகளுக்கு ஆதரவு; மற்றும் மலேசியாவில் மலாய் ஆதிக்கத்தின் கீழான மலேசிய பொதுச் சேவையில் சீர்திருத்தங்கள் போன்றவை சர்ச்சைக்குரியவையாகக் கருதப்படுகின்றன.
ராமசாமி அவர்களின் தந்தை பழனிச்சாமியும் தாயார் பழனியம்மாளும் தோட்டங்களில் வேலை செய்வதற்காக தமிழ்நாட்டில் இருந்து 1920-இல் மலாயாவுக்குக் குடிபெயர்ந்தனர். ராமசாமி மே 10 , 1949 அன்று சித்தியவான் பேராக்கில் பிறந்தார்.
இவரின் உடன்பிறப்புகள் ஆறு சகோதரிகள் ஒரு சகோதரர். இராமசாமி ஆரம்பக் கல்வியை பேராக், சித்தியவான் ஆங்கிலோ சீன ஆரம்ப பள்ளியில் கற்றார்.
இராமசாமி, புனித அந்தோனியார் மேல்நிலை பள்ளியில் தன் இடைநிலைக் கல்வியையும், ஜொகூர் பாரு சுல்தான் அபுபக்கர் கல்லூரியில் மேல் நிலைக் கல்வியைப் பயின்றார். பின்னர் 1972-இல் நியூசிலாந்தின் வெலிங்டன் பாலிடெக்னியில் பத்திரிகை துறையில் பட்டயக் கல்வியை முடித்தவுடன் கோத்தா திங்கியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றினார்.
1977 ஆம் ஆண்டு தன்னுடைய இளங்கலைப் பட்டத்தை அமெரிக்கா இந்தியானா பல்கலைக்கழகத்திலும், 1980-ஆம் ஆண்டு முதுகலைப் பட்டத்தை கனடா புளூமிங்டன் பல்கலைக்கழகத்திலும் பெற்றார். இறுதியாக 1991-ஆம் ஆண்டில் மலாயா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் / பொது நிர்வாகத்தில் இளநிலை (Ph.D) பட்டம் பெற்றார்.
1981 இல் மலேசிய தேசிய பல்கலைக்கழகம் பேராசிரியர் இராமசாமி அவர்களை அரசியல் அறிவியல் துறை விரிவுரையாளராக நியமித்தது. 1993 ஆம் ஆண்டில் அவர் அரசியல் பொருளாதாரம் பற்றிய துறையில் இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியராகப் பணியாற்றினார் .
பேராசிரியராகப் பணியாற்றிய போது மலேசிய அரசியல், பொருளாதாரம், சர்வதேச உறவுகள், அரசியல் கோட்பாடு, தொழில்துறை உறவுகள், உலகமயமாக்கல், ஆட்சி போன்ற துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான கற்றுறைகளை எழுதியுள்ளார். இன்றுவரை அவர் உள்ளூர் மற்றும் சர்வதேச பத்திரிகைகளில் பல கட்டுரைகளும், நான்கு நூல்களும் எழுதியுள்ளார். பேராசிரியர் இராமசாமி அவர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாநாடுகளிலும் கருத்தரங்குகளிலும் நூற்றுக்கணக்கான ஆய்வறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளார்.
அவரது நிபுணத்துவத்தை அங்கீகாரப்படுத்தி, மெக்கில் பல்கலைக்கழகத்தின் நோர்டிக் ஆசிய ஆய்வு நிறுவனமும், ஜப்பான் டோக்கியோ மற்றும் கியோட்டோ, பல்கலைக்கழகங்களும் விருதுகளை வழங்கி அவரை கெளரவப்படுத்தின. சமீபத்தில் ஜெர்மனி ரப்பர் பல்கலைக்கழகத்தினால் பேராசிரியர் இராமசாமிக்கு சிறப்பு பேராசிரியர் விருது வழங்கப்பட்டது.
பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு ஆகும். சமீபத்தில் இந்த அமைப்பின் உலக தொழிலாளர் பல்கலைக்கழக கல்வி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக பேராசிரியர் இராமசாமி நியமிக்கப்பட்டார். பல ஆண்டுகளாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழிற்சங்கங்களின் ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.
குழந்தை தொழிலாளர் (அடிமை முறை எதிர்ப்பு சமூகம், இங்கிலாந்து நிதி), சிலாங்கூர் தோட்ட வீட்டில் உரிமை திட்டம் (சிலாங்கூர் மாநில அரசாங்கம்), மலேசியா இந்தியர்கள் சமூக பொருளாதார அம்ச திட்டங்கள், பொருளாதார பொதுநல ஆராய்ச்சி அறக்கட்டளை, முன்னாள் தோட்ட தொழிலாளர்கள் மீது வணிக தாக்கம் (ஊரக வளர்ச்சி அமைச்சகம்), ரியோவில், சுமத்ரா ( நிசான் நிறுவனம், ஜப்பான்) மற்றும் தோட்ட தொழிலாளர் ஆய்வு மலேசியா ( ILO), தொழிலாளர் மீதான உலகமயமாக்கலின் தாக்கங்கள் உள்ளிட்டவை இவற்றில் குறிப்பிடத்தக்கன.
தமிழீழ விடுதலைப் புலிகள் 2003 ஆம் ஆண்டு பேராசிரியர் இராமசாமியை அதன் அரசியலமைப்பு விவகார குழுவின் உறுப்பினர்களிள் ஒருவராக நியமித்தது.[சான்று தேவை] இவரிடம் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் பகுதிகளில் இடைக்கால நிர்வாக திட்டத்தை வரையும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
இதில் அவரது ஈடுபாட்டை இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் மற்றும் அவரது அரசியலமைப்பு விவகார அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் ஆகியோர் பாராட்டினர். ராமசாமி அவர்கள் (கெரக்கான் ஆச்செ மெர்டேகா) ஆச்செ விடுதலை இயக்கத்தின் ஆலோசகர்களில் ஒருவராக ஆச்செ - இந்தோனேசியா பேச்சுவார்த்தையில் பங்கேற்றார். அவருடைய அயராத முயற்சியினால் ஆகஸ்ட் 5 , 2005 அன்று இரண்டு போட்டியிடும் கட்சிகள் இடையே ஒரு வரலாற்று சமாதான உடன்படிக்கை கையெழுத்தாகியது.
மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணிபுரிந்த இவரை, 26 ஆகஸ்ட், 2005 அன்று காரணம் இன்றி பல்கலைக்கழக நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. அவர் சிறுபான்மையினருக்காகப் பேசியது, இலங்கை மற்றும் ஆச்செ சமாதான பேச்சுக்களில் இடம் பெற்றவை போன்ற காரணங்களுக்காக நீக்கப்பட்டார் எனப் பின்னர் தெரிய வந்தது. பல்கலைக்கழகத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் அவர், அவரது கொள்கைகள் மற்றும் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயக செயல் கட்சியில் சேர்ந்தார்.
2008 மலேசிய பொதுத் தேர்தலில், பினாங்கு சட்டமன்றத்தில், பாக்காத்தான் ராக்யாட்டின் ஜனநாயக செயல் கட்சி 19 இடங்களையும், மக்கள் நீதிக் கட்சி 9 இடங்களையும், மலேசிய இஸ்லாமிய கட்சி 1 இடமும் பெற்று வென்றன.[2]. அதில் பேராசிரியர் இராமசாமி ஜனநாயக செயல் கட்சியின் சார்பில் பத்து காவான் நாடாளுமன்றம் மற்றும் பிறை சட்டமன்ற தொகுயில் அப்போதைய பினாங்கு முதலமைச்சர் கோ சு கூன்னை தோற்கடித்து மகத்தான வெற்றி பெற்றார்.
தேர்தல் முடிவுகளுக்குப் பின் பொறுப்பேற்ற புதிய பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் பினாங்கு துணை முதல்வராக இராமசாமியை நியமித்தார். மலேசிய அரசியல் வரலாற்றில் தமிழர் ஒருவர் மலேசிய மாநிலத் துணை முதல்வர் பதவி வகிப்பது இதுவே முதல் முறையாகும்.[3]
துணை முதல்வராக ஆனபின் பினாங்கு தமிழர்கள் மற்றுமின்றி மலேசிய தமிழர்கள் மத்தியிலும் பிரபலமானார். சட்டமன்றத்தில் இவர் குரல் ஒலித்தது மட்டுமல்லாது 2008-2013 மலேசிய நாடாளுமன்றத்திலும் இவர் குரல் ஒலித்தது. 2008-2013 மலேசிய நாடாளுமன்றத்தில் தனி ஈழம் மற்றும் பாலஸ்தின விடுதலை பற்றி விவாதம் செய்தார். மலேசிய மத்திய அரசாங்கம், இலங்கை அரசை ஆதரிக்கக் கூடாது என்று கேட்டுக்கொன்டார்.
இரண்டாவது முறையாக 2013 மலேசிய பொதுத் தேர்தலில், மீண்டும் போட்டியிட்டு பிறை சட்டமன்ற தொகுதியில் மகத்தான வெற்றி பெற்றார். ஆனால் அவர் இம்முறை நாடாளுமன்றத்திற்கு போட்டியிடவில்லை. 2013 பினாங்கு சட்டமன்றத் தேர்தலில், பாக்காத்தான் ராக்யாட்டின் ஜனநாயக செயல் கட்சி, மக்கள் நீதிக் கட்சி, மலேசிய இசுலாமிய கட்சி ஆகியவை மீண்டும் பினாங்கில் வெற்றி பெற்றன.
இரண்டாம் முறையாக பொறுப்பேற்ற முதல்வர் லிம் குவான் எங் மீண்டும் இராமசாமியை பினாங்குத் துணை முதல்வராக நியமித்தார். இவர் மாநில பொருளாதார திட்டமிடல், கல்வி, மனித வளங்கள், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு ஆகிய துறைகளின் அமைச்சராகவும், பினாங்கு இந்து அறப்பணி வாரிய தலைவராகவும், மாநகராட்சி குடிநீர் வழங்கல் வாரிய துணை தலைவராகவும் பணியாற்றுகின்றார்.
ஆண்டு | தொகுதி | கிடைத்த வாக்குகள் | பெரும்பான்மை | பெறப்பட்ட வாக்குகள் | எதிராளி | விளைபயன் |
---|---|---|---|---|---|---|
2008 | பி46 பத்து காவான், நாடாளுமன்ற தொகுதி | 23,067 | 9,485 | 37,289 | கோ சு கூன் (தேசிய முன்னணி - மலேசிய மக்கள் இயக்கக் கட்சி) | 79% |
2008 | என்16 பிறை, சட்டமன்ற தொகுதி | 7,668 | 5,176 | 10,651 | கிருஷ்ணன் லெட்சுமணன் (தேசிய முன்னணி (மலேசியா) - மலேசிய இந்திய காங்கிரசு) | 75% |
2013 | என்16 பிறை, சட்டமன்ற தொகுதி | 10,549 | 7,959 | 13,465 | கிருஷ்ணன் லெட்சுமணன் (தேசிய முன்னணி (மலேசியா) - மலேசிய இந்திய காங்கிரசு) | 83.90% |
ஏப்ரல் 10, 2016 அன்று பிரபல இசுலாமிய மதபோதகர் டாக்டர் சாகிர் நாயக்கை "சைத்தான்" என்று அழைத்த பி.ராமசாமி தன் முகநூல் பதிவில் "இந்த நாட்டில் இருந்து 'சைத்தான்' ஜாகிர் நாயக் வெளியேற்றுவோம்!" என்று எழுதி இருந்தார். கடும் பின்விளைவின் காரணமாக அவர் தன் இடுகையை நீக்கி, மன்னிப்பு கோரினார். மேலும் மலேசியாவில் உள்ள முசுலீம்களிடையே அதிருப்தியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியதற்காக வருந்துகிறேன் என்று கூறினார்.
2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பின் போது காஷ்மீர் (இராணுவ மீறல்களுக்கு பெயர் பெற்ற பகுதி) பன்னாட்டு அளவில் ஆட்சேபிக்கப்பட்ட நிகழ்வில், அப்போதைய மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது, காஷ்மீரில் மனித உரிமைகள் மீண்டும் நிலைபெற வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் தன் கவலையை வெளிப்படுத்தினார்.
அதனை பி. இராமசாமி கடுமையாக விமர்சித்தார்; மற்றும் அந்த அவசர இராணுவ ஆக்கிரமிப்பை ஆதரித்து கருத்துகளை தெரிவித்தார்[4]. காஷ்மீரின் சிறப்புத் தகுதிக்கு தடை செய்யப்பட்ட ஓராண்டு நிறைவு விழாவில், தான் இனி பிரதமராக இல்லாத நிலையில், "காஷ்மீர் பிரச்சினையைப் பற்றி பேச முடியும்" என்று கூறிய மகாதீர், தன் முந்தைய அறிக்கைகளில் ஏற்பட்ட பின்னடைவுகளையும் குறிப்பிட்டார்.
2019 டிசம்பரில், இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டம் (அண்டை முசுலிம் பெரும்பான்மை நாடுகளை மட்டுமே குறிப்பிட்டு வடிவமைக்கப்பட்டது), NRC[5][6] தடுப்பு முகாம் மரணங்கள் மற்றும் இச்சட்டத்திற்கு எதிரான எதிர்ப்புகளின் போது ஏற்பட்ட மரணங்கள் மீது பல தலைவர்களும் மனித உரிமை அமைப்புகளும் உலகளாவிய கண்டனத்தைத் தெரிவித்தபோதிலும், இச்சட்டத்தின் தேவைக்காக பி. இராமசாமி பல கட்டுரைகளாக கருத்துகளை தெரிவித்தார் [7][8] இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் காரணமாக ஏற்பட்ட மரணங்கள் குறித்து (எதிர்ப்புக் போராட்டங்களிலும், தடுப்புக்காவல் முகாமின் போது மூதாதையர் ஆவணங்கள் போதாமையை சிறையில் இறப்பு[5][6]) அப்போதைய மலேசிய பிரதமர் மகாதீர் விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார். அந்த மகாதீர் அவர்களின் கருத்தை கடுமையாக கண்டிடித்து இந்திய காட்சி செய்தி ஊடகங்களில் தோற்றமளித்தார்[9]. "பி.ராமசாமி மலேசியாவின் அமைச்சரா அல்லது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரியா?" என்று கேள்வி எழுப்பிய ஹாபிஸ் ஹாசன் பரணிடப்பட்டது 2020-08-19 at the வந்தவழி இயந்திரம், இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் பாதிப்பு இருந்தும் கூட இந்தியாவின் குடியுரிமை கொள்கைக்காக ஏன் இவ்வளவு முனைப்பு கொடுக்கவேண்டும் என்று கேள்வி எழுப்பியிருந்தார்[10].