இராமச்சந்திர காந்தி (சூன் 9, 1937—சூன் 13 2007) என்பவர் ஒரு மெய்யியல் அறிஞர் ஆவார். இவருடைய தந்தையார் தேவதாசு காந்தி (மகாத்மா காந்தியின் மகன்). தாயார் இலக்குமி (இராசகோபாலசாரியின் மகள்) ஆவார்கள். இராசமோகன் காந்தி, கோபால்கிருட்டின காந்தி, தாரா காந்தி பட்டாசார்சி ஆகியோர் இராமச்சந்திர காந்தியின் உடன் பிறந்தவர்கள். இவரது மகள் லீலா காந்தி ஆவார்.
இராமச்சந்திர காந்தி ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் மெய்யியல் படித்து முனைவர் பட்டம் பெற்றார். விசுவ பாரதி பல்கலைக் கழகம், பஞ்சாப் பல்கலைக் கழகம், பெங்களூரு பல்கலைக் கழகம், கலிபோர்னியா ஒன்றிணைந்த கல்வி நிறுவனம் ஆகியவற்றில் கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றினார். ஐதராபாத்து பல்கலைக் கழகத்தில் இவருடைய முயற்சியால் தத்துவத்துறை ஏற்படுத்தப்பட்டது.
காந்தியடிகளையும் இரமண மகரிசியையும் ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் ஆராய்ந்து ஒரு நூல் எழுதினார். பாபர் மசூதி இடிக்க வேண்டும் என்று இந்துத்துவ இயக்கங்கள் முயன்றபோதும் பரப்புரை செய்தபோதும் தம் இந்து மத ஆராய்ச்சி அறிவு கொண்டு அதற்கு எதிராக கருத்துகளை எழுதினார். அது போலவே 2002 ஆம் ஆண்டில் குசராத்தில் நடந்த இனக் கலவரத்தில் இசுலாமியர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்தார்.
http://www.aaa.org.hk/Collection/Details/29764 பரணிடப்பட்டது 2015-10-28 at the வந்தவழி இயந்திரம்
http://www.telegraphindia.com/1070617/asp/opinion/story_7927485.asp