இராமச்சந்திர பிரசாத் சிங் | |
---|---|
இந்திய உருக்குத் துறை இணை அமைச்சர் | |
பதவியில் 7 சூலை 2021 – 6 சூலை 2022 | |
பிரதமர் | நரேந்திர மோடி |
முன்னையவர் | தர்மேந்திர பிரதான் |
பின்னவர் | ஜோதிராதித்தியா சிந்தியா |
தேசியத் தலைவர், ஐக்கிய ஜனதா தளம் | |
பதவியில் 27 டிசம்பர் 2020 – 31 சூலை 2021 | |
முன்னையவர் | நிதிஷ் குமார் |
பின்னவர் | லாலன் சிங் |
மாநிலங்களவை உறுப்பினர், இந்திய நாடாளுமன்ற மேலவை | |
பதவியில் 8 சூலை 2010 – 4 சூலை 2022 | |
பின்னவர் | கிரு மகதோ |
தொகுதி | பிகார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 6 சூலை 1958 முஸ்தாபூர், நாலந்தா மாவட்டம், பிகார் |
அரசியல் கட்சி | ஐக்கிய ஜனதா தளம் (2010-2022) |
துணைவர்(கள்) | கிரிஜா சிங், 1982 |
பிள்ளைகள் | 2 |
சமயம் | இந்து சமயம் |
இணையத்தளம் | rcpsingh |
புனைப்பெயர் | ஆர் சி பி சிங் [1] |
இராம்சந்திர பிரசாத் சிங் (Ram Chandra Prasad Singh) முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவரும்[2], மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார்.[3] இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இருந்த போது, இவர் பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாரின் முதன்மைச் செயலராக பணியாற்றியவர்.[1][4]
நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் இராமச்சந்திர பிரசாத் சிங் இந்திய உருக்குத் துறை இணை அமைச்சாக 7 சூலை 2021 முதல் 6 சூலை 2022 முடிய பணியாற்றினார்.[5]