இராமாமிர்த செயராமன்

இராமாமிர்த செயராமன்
பிறப்பு(1937-10-10)10 அக்டோபர் 1937
தமிழ் நாடு, இந்தியா
இறப்பு14 ஏப்ரல் 2019(2019-04-14) (அகவை 81)
மதுரை, தமிழ் நாடு, இந்தியா
தேசியம்இந்தியன்
துறை
  • நுண்ணுயிரி மரபியல்
பணியிடங்கள்
அறியப்படுவதுஎஸ்செரிச்சியா கோலி மரபியல்
விருதுகள்1982 சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது

இராமாமிர்த செயராமன் (Ramamirtha Jayaraman) (10 அக்டோபர் 1937 - 14 ஏப்ரல் 2019  ) என்பவர் இந்திய மரபியலாளர் ஆவார். இவர் பாக்டீரியாவில் குறிப்பாக எஸ்செரிச்சியா கோலியில் மேற்கொண்ட ஆய்வுகளுக்காக நன்கு அறியப்பட்டவர்.[1] பாக்டீரியாவின் வரிவடிவாக்கத்த்இனை கட்டுப்படுத்துவது குறித்த இவரது ஆய்வுகள், இதில் துணை காரணிகளின் பங்களிப்பு மற்றும் ஆர்.என்.ஏ பாலிமரேசுடனான தொடர்புகளுக்குச் சான்றளிப்பதாக அறியப்படுகிறது.[2] இவர் பேராசிரியராக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும் [3] மற்றும் விஞ்ஞானியாக டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார்.[4] ஓய்வு பெற்ற பிறகு, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தகைசால் அறிவியலாளராக பணியாற்றினார்.[5] இவர் மூலக்கூறு மரபியலில் ஆய்வக கையேடு ஒன்றினையும்[6] மற்றும் பல துண்டுப்பிரசுரங்களையும்[7] மற்றும் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பப்மெட், மருத்துவ ஆவணங்களின் இணைய தரவகத்தில் இவரது ஆய்வுகள் சுமார் 59 பட்டியலிடப்பட்டுள்ளது.[8] அறிவியல் ஆராய்ச்சிக்காக இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம், உயிரியல் அறிவியல் பிரிவில் 1982ஆம் ஆண்டில், மிக உயர்ந்த இந்திய அறிவியல் விருதுகளில் ஒன்றான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நகர் பரிசை விருதினை வழங்கியது.[9]

செயராமன் அவர்கள் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் நாளன்று காலமானார்.[10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. name="Brief Profile of the Awardee">"Brief Profile of the Awardee". Shanti Swarup Bhatnagar Prize. 2016. பார்க்கப்பட்ட நாள் 28 September 2016.
  2. "Handbook of Shanti Swarup Bhatnagar Prize Winners" (PDF). Council of Scientific and Industrial Research. 1999. p. 31. Archived from the original (PDF) on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 28 September 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. D. P. Burma (2011). From Physiology and Chemistry to Biochemistry. Pearson Education India. pp. 238–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-317-3220-5.
  4. "Letter from Ramamirtha Jayaraman to James D. Watson". Cold Spring Harbor Laboratory. 2016. பார்க்கப்பட்ட நாள் 30 September 2016.
  5. R. Jayaraman (August 2008). "Joshua Lederberg's legacy to bacterial genetics". Resonance 13 (8): 716–729. doi:10.1007/s12045-008-0079-9. 
  6. Kunthala Jayaraman, R. Jayaraman (1980). Jayaraman Laboratory Manual in Molecular Genetics. John Wiley & Sons. p. 48. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0852264294.
  7. E.B. Goldberg, R. Jayaraman (1971). Transcription of Bacteriophage T4 Genome In Vivo. Cold Spring Harbor symposia on Quantitative Biology. அமேசான் தர அடையாள எண் B00N182AHY.
  8. "Jayaraman R on PubMed". PubMed. 2016. பார்க்கப்பட்ட நாள் 30 September 2016.
  9. "View Bhatnagar Awardees". Shanti Swarup Bhatnagar Prize. 2016. பார்க்கப்பட்ட நாள் 19 September 2016.
  10. M.Hussain Munavar and K.Dharmalingam. 2020. R. Jayaraman (1937–2019). Current Science, 118(3):488-489.