இராமேசுவர் தாக்கூர் | |
---|---|
இராமேசுவர் தாக்கூர் | |
15வது மத்திய பிரதேச ஆளுநர் | |
பதவியில் 30 ஜூன் 2009 – 7 செப்டெம்பர் 2011 | |
முன்னையவர் | பல்ராம் சாக்கர் |
பின்னவர் | ராம் நரேஷ் யாதவ் |
15வது கருநாடக ஆளுஞர் | |
பதவியில் 21 ஆகத்து 2007 – 24 ஜூன் 2009 | |
முன்னையவர் | டி. என். சதுர்வேதி |
பின்னவர் | எச். ஆர். பரத்வாஜ் |
20வது ஆந்திரப் பிரதேச ஆளுஞர் | |
பதவியில் 29 ஜனவரி 2006 – 22 ஆகத்து 2007 | |
முன்னையவர் | சுசில்குமார் சிண்டே |
பின்னவர் | நா. த. திவாரி |
22வது ஒடிசா ஆளுஞர் | |
பதவியில் 18 நவம்பர் 2004 – 21 ஆகத்து 2007 | |
முன்னையவர் | எம். எம். ராஜேந்திரன் |
பின்னவர் | முரளிதர் சந்திரகாந் பண்டாரி |
நடுவண் அமைச்சர் | |
தலைவர் பாரதிய சாரணர் சங்கம் | |
பதவியில் 1998–2001 | |
தலைவர் இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம் | |
பதவியில் 1966–1967 | |
முன்னையவர் | சிஏ எம்பி சிதாலே |
பின்னவர் | சிஏ வி.பி. ஹரிபக்தி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | தாக்கூர்ககாதி, பீகார் ஒரிசா மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது சார்கண்டில்) | 28 சூலை 1925
இறப்பு | 15 சனவரி 2015 தில்லி, இந்தியா | (அகவை 89)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | நர்மதா தாக்கூர் |
பிள்ளைகள் | 4 |
இராமேசுவர் தாக்கூர் (Rameshwar Thakur) (ஜூலை 28 1925 - 15 ஜனவரி 2015) இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியும் ஆவார். இவர் மத்திய பிரதேச ஆளுநராக 2009 முதல் 2011 வரையிலும், ஒடிசா ஆளுநராக 2004 முதல் 2006 வரையிலும், ஆந்திரப் பிரதேச ஆளுநராக 2006 முதல் 2007 வரையிலும், கர்நாடகா ஆளுநராக 2007 முதல் 2009 வரையிலும் இருந்தார். பட்டய கணக்கறிஞரான, இவர் 1966 முதல் 1967 வரை இந்தியாவின் பட்டய கணக்கறிஞர்கள் கழகத்தின் தலைவராகவும் இருந்தார்.
தாக்கூர் சார்க்கண்டின் கோடா மாவட்டத்திலுள்ள தாக்கூர் காந்தி கிராமத்தில் பிறந்தார். இவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். நவம்பர் 1998 முதல் நவம்பர் 2001 வரை இந்திய சாரணர் சங்கத்தின் தலைவராக பணியாற்றினார். மீண்டும் நவம்பர் 2004 க்குப் பிறகு. தாக்கூர் ஆகஸ்ட் 21, 2007 அன்று கர்நாடகத்தின் 15வது ஆளுநராக பொறுப்பேற்றார். [1]
ஜூன் 24, 2009 அன்று இவர் மத்திய பிரதேச ஆளுநராக மாற்றப்பட்டார். [2] இவர் 15 ஜனவரி 2015 அன்று தில்லியில் இறந்தார். [3]
இவர் நர்மதா என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.