தனிநபர் தகவல் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசியம் | இந்தியர் | ||||||||||
பிறப்பு | பகூவாரா கிராமம், சோன்பத்ரா மாவட்டம், உத்தரப் பிரதேசம்[1] | ||||||||||
விளையாட்டு | |||||||||||
நாடு | இந்தியா | ||||||||||
விளையாட்டு | தடகள விளையாட்டு | ||||||||||
நிகழ்வு(கள்) | 35 கிலோமீட்டர் நடைப்போட்டி நடைப்போட்டி கலப்பு அணி | ||||||||||
சாதனைகளும் விருதுகளும் | |||||||||||
தனிப்பட்ட சாதனை(கள்) | 2:29.56 தேசிய சாதனை[2] | ||||||||||
பதக்கத் தகவல்கள்
|
இராம் பாபூ (Ram Baboo) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள விளையாட்டு வீரராவார். நடைப்போட்டி விளையாட்டுகளில் இவர் இந்தியாவின் சார்பாக விளையாடி வருகிறார். 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 35 கிலோ மீட்டர் பந்தய நடைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.[3][4] இப்போட்டியில் மஞ்சு ராணியுடன் இணைந்து ஆசிய விளையாட்டுப் போட்டியில் 35 கிமீ ஓட்டப்பந்தய நடை கலப்பு அணி வெண்கலப் பதக்கத்தை வென்றார். தடகளப் பயிற்சியில் இருந்தபோதும், தினசரி கூலித் தொழிலாளியாகவும், உணவு விடுதி பணியாளராகவும் பணிபுரிந்ததால் இவரது சாதனை பரவலான கவனத்தைப் பெற்றது.[4]
2022 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான 35 கிமீ ஓட்டப்பந்தய நடைப் போட்டியில் இவர் ஒரு புதிய தேசிய சாதனையை நிகழ்த்தினார்.[5]