இராம்பாக் மகால் | |
---|---|
![]() இராம்பாக் அரண்மனை, அமிர்தசரசு | |
![]() | |
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | சீக்கியக் கட்டிடக்கலை |
நகரம் | இராம்பாக் அரண்மனை, அமிருதசரசு பஞ்சாப். |
நாடு | இந்தியா |
ஆள்கூற்று | 31°22′54″N 74°31′28″E / 31.3818°N 74.5245°E |
நிறைவுற்றது | 1819 |
செலவு | ரூபாய் 1,25,000 |
கட்டுவித்தவர் | பாகிர்-அஜீஸ்-உல்- தின் தேசா சிங், இலெஹ்னா சிங் மஜிதியா |
தொழில்நுட்ப விபரங்கள் | |
அமைப்பு முறை | சிவப்பு கற்கள் |
இராம்பாக் அரண்மனை (Ram Bagh Palace) அல்லது இராம்பாக் மகால் என்பது இந்தியாவின் பஞ்சாபில் சீக்கிய பேரரசின் நிறுவனர் ரஞ்சித் சிங்கின் அரண்மனையாக இருந்தது. இதை கோடை அரண்மனையாக ரஞ்சித் சிங் பயன்படுத்தினார். இந்த அரண்மனை இராம்பாக் அல்லது பரந்தாரி என பிரபலமாக அழைக்கப்படும் ஒரு தோட்டத்தின் மையத்தில் அமைந்துள்ளது.[1] இந்த அரண்மனை உட்பட முழு இராம்பாக் வளாகத்தையும் பஞ்சாப் அரசு 1997 இல் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவித்துள்ளது.[2]
மகாராஜா ரஞ்சித் சிங் தனது ஆட்சியின் கீழ் பல்வேறு பகுதிகளின் வளர்ச்சியையும் அழகுபடுத்துவதிலும் தீவிர அக்கறை கொண்டிருந்தார். அமிர்தசரசு நகரம் சீக்கியப் பேரரசின் ஆன்மீக மற்றும் கலாச்சார நடவடிக்கைகளின் மையமாகவும், பாங்கி சிற்றரசுப் பகுதிகளின் கோட்டையாகவும் இருந்தது. இது ரஞ்சித் சிங்கின் சிறப்பு கவனத்தைப் பெற்றது. வைசாக்கி, விஜயதசமி, தீபாவளி போன்ற சந்தர்ப்பங்களில் அவர் அமிர்தசரசு நகருக்கு வருவார். எனவே,இலாகூரின் சாலிமார் பூங்காவின் முகலாயக் கட்டிடக்கலை வடிவத்தில் ஒரு அழகான தோட்டத்தை உருவாக்கினார்.
ரஞ்சித் சிங் இறந்த பிறகு, பல பழைய கட்டிடங்கள் ஆங்கிலேயர்களால் கையகப்படுத்தப்பட்டன. சமீபத்திய ஆண்டுகளில், அரண்மனையும், இராம்பாக் வளாகத்தில் உள்ள மற்ற கட்டிடங்களும், நினைவுச்சின்னங்களும் பாதுகாப்பு இல்லாததால் அத்துமீறல் அல்லது அச்சுறுத்தலுக்கு உள்ளாகின. இதைக் கருத்தில் கொண்டு பஞ்சாப் மாநில அரசு முழு வளாகத்தையும் ஏப்ரல் 10, 1997 அன்று 'பாதுகாக்கப்பட்ட' பகுதியாக அறிவித்துள்ளது.[2]