இராயபுரம் இரயில் நிலையம் | |
---|---|
தென்னிந்திய ரயில்வே மற்றும் சென்னை புறநகர் ரயில் நிலையம் | |
ராயபுரம் நிலையம் | |
பொது தகவல்கள் | |
உரிமம் | ரயில்வே அமைச்சகம், இந்திய ரயில்வே |
தடங்கள் | சென்னை புறநகர ரயில்வேயின் வடக்கு, மேற்கு, மேற்கு வடக்கு, மேற்கு தெற்கு தடங்கள் |
நடைமேடை | 4 |
இருப்புப் பாதைகள் | 26 |
கட்டமைப்பு | |
தரிப்பிடம் | உள்ளது |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | RPM |
பயணக்கட்டண வலயம் | தென்னிந்திய ரயில்வே |
வரலாறு | |
திறக்கப்பட்டது | சூன் 28, 1856[1][2] |
மின்சாரமயம் | ஆகஸ்டு 9, 1979[3] |
இராயபுரம் இரயில் நிலையம் என்பது தென் இந்தியாவின் முதல் ரயில் நிலையமாகும். இது கட்டப்பட்ட ஆண்டு 1856. இதுவே இந்திய துணைக்கண்டத்தில் மிகப் பழமையான இரயில் நிலையமாகும். (இந்தியாவில் முதலில் கட்டப்பட்ட மும்பை மற்றும் தானே இரயில் நிலையங்கள் ஆகியவை தற்பொழுது செயல்பாட்டில் இல்லை). இது சென்னைக் கடற்கரை, அரக்கோணம் இடையேயான இரயில் பாதையில் அமைந்துள்ளது. இதை 1856 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி அப்போதைய மெட்ராஸ் ஆளுநரான ஹாரிஸ் பிரபு திறந்து வைத்தார். இங்கிருந்து தான் தென் இந்தியாவின் முதல் இரயில், அப்போதைய ஆற்காடு நவாப்பின் தலைமை இடமாக இருந்த ஆற்காடு வரை இயக்கப்பட்டது.
இந்த நிலையம் ஆகஸ்டு 1979இல் மின்மயமாக்கப்பட்டது.[3]
{{cite web}}
: Cite has empty unknown parameter: |coauthors=
(help)