இரிக்கார்டோ நவரோ Ricardo Navarro | |
---|---|
தேசியம் | சால்வடோரியன் |
பணி | பொறியாளர் |
விருதுகள் | கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (1995) |
இரிக்கார்டோ நவரோ (Ricardo Navarro) மத்திய அமெரிக்காவிலுள்ள எல் சால்வடோர் நாட்டைச் சேர்ந்த ஒரு பொறியாளராவார். இவர் சுற்றுச்சூழல் அமைப்பான செஸ்டா எனப்படும் பொருத்தமான தொழில்நுட்பத்திற்கான சல்வடார் மையத்தின் நிறுவனராகவும் தலைவராகவும் இருந்தார். இந்நிறுவனத்தின் நிலையான வளர்ச்சிக்கு இரிக்கார்டோ நவரோ செய்த பங்களிப்புகளுக்காக 1995 ஆம் ஆண்டு இவருக்கு கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது.[1]