பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
இரிடியம் இருகுளோரைடு, இரிடியம் பைகுளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
13465-17-3 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
Cl2Ir | |
வாய்ப்பாட்டு எடை | 263.12 g·mol−1 |
தோற்றம் | அடர்-பச்சை நிறப் படிகங்கள் |
உருகுநிலை | 773 °C (1,423 °F; 1,046 K) |
கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இரிடியம்(II) குளோரைடு (Iridium(II) chloride) IrCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2] இரிடியமும் ஐதரோ குளோரிக் அமிலமும் சேர்ந்து இந்த உலோக உப்பு உருவாகிறது.
தூள் செய்யப்பட்ட உலோக இரிடியத்துடன் குளோரின் வாயுவைச் சேர்த்து சூடாக்கப்படும் போது இரிடியம்(II) குளோரைடு உருவாகிறது.:[3][4]
இரிடியம்(III) குளோரைடு மற்றும் உலோக இரிடியம் ஆகியவற்றுக்கு இடையேயான வினையிலும் இரிடியம்(II) குளோரைடு தயாரிக்கப்படுகிறது.
இரிடியம்(II) குளோரைடு பளபளப்பான கரும்-பச்சை படிகங்களாக உருவாகிறது. இவை நடைமுறையில் நீரில் கரையாது.[5] அமிலங்கள் மற்றும் காரங்களில் சிறிதளவு கரையும். 773 ° செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கப்படும்போது இது உருகாமல் சிதைகிறது.
ΔG (298 கெல்வின், கிலோயூல்/மோல்) உருவாக்கத்தின் நிலையான கிப்சு ஆற்றல் அளவு -139.7 ஆகும்.
இரிடியம்(II) குளோரைடை 773 ° செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் சமன்பாட்டில் கண்டவாறு சிதைக்வடைகிறது:[6]
798 ° செல்சியசுக்கு மேற்பட்ட வெப்பநிலையில் இது முழுமையாகச் சிதைவடைகிறது: