இரியா பிள்ளை | |
---|---|
பிறப்பு | 1965 (அகவை 58–59) |
பணி | விளம்பர நடிகை |
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் | 1 |
உறவினர்கள் | சுபைதா பேகம் (தாய்வழி பாட்டி) |
இரியா பிள்ளை (Rhea Pillai) இந்தியாவைச் சேர்ந்த தொலைக்காட்சி மற்றும் விளம்பரங்களில் தனது படைப்புகளுக்கு பெயர் பெற்றவர். 2003ஆம் ஆண்டில், சமூக சேவைக்கான அனைத்துலக பெண்கள் நாளில் நடிகை ரவீணா டாண்டன், இந்திய சித்தார் இசைக்கலைஞரான அனுஷ்கா சங்கர், ஆடை வடிவமைப்பாளரான ரீது பெரி ஆகியோருடன் "ஆண்டின் சிறந்த பெண்" என்று கௌரவிக்கப்பட்டார். [2] 2006ஆம் ஆண்டில், கார்ப்பரேட் என்ற பாலிவுட் திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார். இவர், 1981ஆம் ஆண்டில் சிரீ சிரீ இரவிசங்கரால் நிறுவப்பட்டஒரு மனிதாபிமான அரசு சாரா அமைப்பான "வாழும் கலை" நிறுவனத்தில் தன்னார்வ அடிப்படையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். [3] இந்நிறுவனம் பண்டைய இந்திய அறிவுச் செல்வத்தை நிகழ் காலத்திற்கு ஏற்ப மாற்றி அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. தியானம் மற்றும் யோகா ஆகியவற்றின் அடிப்படையில் பல மன அழுத்தங்களை நீக்குதல் மற்றும் சுய மேம்பாட்டு திட்டங்களை வழங்குகிறது.
இவர், ரேமாண்ட் பிள்ளை மற்றும் அவரது மனைவி துர்-இ-ஷாஹ்வார் தன்ராஜ்கீர் ஆகியோரின் மகளாகப் பிறந்தார். [4] இவரது பெற்றோர் இருவரும் கலவையான வகுப்புவாத பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய திருமணமும் ஒரு கலப்புத் திருமணமாகும். இவரது தந்தை, ரேமண்ட் பிள்ளை, ஒரு மலையாளம் பேசும் இந்து தந்தைக்கும், ஆங்கிலோ-இந்தியத் தாய்க்கும் பிறந்தவர். அவர் ஒரு கிறிஸ்தவராக வளர்ந்தார். இரியாவின் தாயார், துர்-இ-ஷாஹ்வார் தன்ராஜ்கீர், ஒரு இந்து, மற்றும் ஐதராபாத் மாநிலத்தின் உயர்மட்ட பிரபுக்களில் ஒருவரான மகாராஜா நரசிங்கராஜ் தன்ராஜ்கீர் கயான் பகதூர் என்பவரின் மகள் ஆவார். இவரது உறவினர் நடிகை சுபைதா பேகம், முஸ்லீம் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர். மேலும், சுபைதா முதல் இந்திய பேசும் படமான ஆலம் ஆரா (1931) என்ற படத்தில் நடித்திருந்தார். இரியா இந்தியாவின் முதல் பெண் திரைப்பட இயக்குனரான பாத்மா பேகமின் பேத்தி ஆவார். மேலும் இந்தியாவின் ஆரம்பகால திரைப்பட நடிகைகளில் ஒருவரான இவரது பாட்டி சுபைதாவின் மூத்த சகோதரியான சுல்தானாவின் பெரிய மருமகளாகவும் இருக்கிறார். [5]
1984 ஆம் ஆண்டில், இவர் மைக்கேல் வாஸ் என்ற அமெரிக்க நாட்டவரை மணந்தார். [1] வாஸ் மற்றும் பிள்ளை 1988இல் பிரிந்து 1994இல் விவாகரத்து பெற்றனர்.
1998ஆம் ஆண்டில், இவர் நடிகர் சஞ்சய் தத்தை மணந்தார். ஆனால் இவர்களும் சில ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்தனர். [6] தாங்கள் நெருங்கிய நண்பர்களாக இருப்பதாக 2006இல் இவர் ஒப்புக் கொண்டார். [7] 2008ஆம் ஆண்டில் விவாகரத்து அதிகாரப்பூர்வமானதும், தீர்வு பற்றிய விவரங்கள் மிட் டே என்ற செய்தித்தாளில் வெளிவந்தது. [8] தி டெலிகிராஃப் என்ற செய்தித்தாளில் இவருக்கும் சஞ்சய் தத்துக்குமான உறவு பற்றி செய்தி வெளியிடப்பட்டது. [9]
இவர், 2005ஆம் ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த பிரபல டென்னிசு வீரர் லியாண்டர் பயஸுடன் சில காலம் உறவு கொண்டிருந்தார். தம்பதியருக்கு அயனா என்ற மகள் உள்ளார். [10] தற்போது இவர்களுக்குள் ஏற்பட்ட பிணக்கு காரணமாக குடும்ப வன்முறை குற்றச்சாட்டில் பயஸ் மீதும் அவரது தந்தை மீதும் 2014 சூன் மாதம் உள்ளூர் பெருநகர நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். [11] [12]
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)