இரியூபன் டேவிட் (Reuben David) இந்தியாவைச் சேர்ந்த ஒரு விலங்கியல் நிபுணர் ஆவார். 1912 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதியன்று அகமதாபாத்தில் இருந்த ஒரு பெனே இசுரேல் யூத குடும்பத்தில் இரியூபன் டேவிட் பிறந்தார்.[1] இந்தியாவின் குசராத்து மாநிலம் அகமதாபாத்தில் உள்ள காங்கரியா உயிரியல் பூங்காவை நிறுவினார்.[2][3] கால்நடை மருத்துவர் தொழிலை சுயமாகக் கற்றுக் கொண்ட இவர் 1951 ஆம் ஆண்டு அகமதாபாத் நகராட்சி ஆணையத்தினால் நகரத்தில் ஓர் உயிரியல் பூங்காவை உருவாக்க அழைக்கப்பட்டார்.[4]
1975 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் இரியூபன் டேவிட்டுக்கு பத்ம சிறீ விருது வழங்கி கௌரவித்தது.[5] எழுத்தாளர் எசுதர் டேவிட் இவரது மகள் ஆவார்.
1989 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 24 ஆம் தேதியன்று இரியூபன் டேவிட் காலமானார்.
{{cite book}}
: |work=
ignored (help)