இரீமா இராகேஷ் நாத் (Reema Rakesh Nath) ஒரு பாலிவுட் திரைப்பட எழுத்தாளர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். சாஜன் (1991) ,ஆர்சூ மற்றும் ஹம் தும்ஹரே ஹை சனம் ஆகிய திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியதன் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.மொஹபத் (1997) எனும் திரைப்படத்தினை இயக்கினார்.
இவர் நடிகர்கள் டி. கே. சப்ரு மற்றும் ஹேமவதியின் மகள் ஆவார். இவரது சகோதரர் தேஜ் சப்ரு மற்றும் சகோதரி பிரித்தி சப்ரு இருவரும் நடிகர்களாவர். இரீமா தயாரிப்பாளர் இராகேஷ் நாத்தை மணந்தார், இவர்களின் மகன் கரண்நாத் பாலிவுட் நடிகர் ஆவார்.[1]