இனங்காட்டிகள் | |
---|---|
13497-91-1 | |
ChemSpider | 123003 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 139480 |
| |
பண்புகள் | |
Cl4P2 | |
வாய்ப்பாட்டு எடை | 203.75 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
உருகுநிலை | −28 °C; −19 °F; 245 K |
கொதிநிலை | 180 °C; 356 °F; 453 K |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | இருபாசுபரசு நாற்புளோரைடு டைபாசுபரசு டெட்ரா அயோடைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இருபாசுபரசு நாற்குளோரைடு (Diphosphorus tetrachloride) என்பது P2Cl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டைபாசுபரசு டெட்ராகுளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் நிறமற்ற நீர்மமாகக் காணப்படுகிறது. அறைவெப்பநிலைக்கு அருகில் இருபாசுபரசு நாற்குளோரைடு சிதைவடைகிறது. காற்றில் தீப்பிடித்து எரியவும் செய்கிறது.[1]
கீழ்கண்ட வினையின் வழியாக 1910 ஆம் ஆன்டில் கௌதியர் இருபாசுபரசு நாற்குளோரைடு சேர்மத்தை தயாரித்தார்:
மேம்படுத்தப்பட்ட தயாரிப்பு முறையானது பாசுபரசு முக்குளோரைடுடன் தாமிரத்தைச் சேர்த்து ஆவியாக்குவதை உள்ளடக்கியதாகும்:[1]
அறை வெப்பநிலைக்கு அருகில் இருபாசுபரசு நாற்குளோரைடு சிதைவடைந்து பாசுபரசு முக்குளோரைடையும் பாசுபரசு மோனோகுளோரைடையும் கொடுக்கிறது:
வளையயெக்சீனுடன் சேர்ந்து மாறுபக்க-C6H10-1,2-(PCl2)2 சேர்மத்தைக் கொடுக்கிறது.[1]