பெயர்கள் | |
---|---|
முறையான ஐயூபிஏசி பெயர்
டைஐதரைடோஇரும்பு(4•) | |
இனங்காட்டிகள் | |
33485-98-2 | |
ChemSpider | 124509 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 141155 |
| |
பண்புகள் | |
FeH24• | |
வாய்ப்பாட்டு எடை | 57.861 கி மோல்−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இரும்பு(II) ஐதரைடு(Iron(II) hydride), என்பது, முறைப்படி, இரும்பு டைஐதரைடு மற்றும் பாலி(டைஐதரைடு இரும்பு) எனப் பெயரிடப்பட்ட ஒரு திண்ம கனிமச் சேர்மம் ஆகும். இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு (FeH
2)
n ஆகும். (இச்சேர்மமானது, ([FeH
2])n or FeH
2) எனவும் குறிக்கப்படலாம். ). இச்சேர்மமானது வினைவேகவியலின்படி, சாதாரண சுற்றுப்புற வெப்பநிலையில் நிலையானதல்ல. மேலும், இதன் பொதுவான பண்புகள் பற்றி சிறிதளவே அறியப்பட்டதாகும். இருந்தபோதிலும், இச்சேர்மமானது கருப்பு நிறமுடைய, படிக வடிவமற்ற தூளாகும், இச்சேர்மம் 2014 ஆம் ஆண்டில் முதன் முறையாக தொகுக்கப்பட்டது.[1]
இரும்பு(II) ஐதரைடானது, இரும்பு(I) ஐதரைடிற்குப் பிறகான இரண்டாவது எளிய பலபடி இரும்பு ஐதரைடாகும். இச்சேர்மம் தனது நிலையற்ற தன்மையின் காரணமாக, தொழிற்துறையில் எந்த ஒரு நடைமுறைப் பயன்பாட்டையும் கொண்டிருக்கவில்லை. இருப்பினும், வேதியியலில், உலோகவியலில், இரும்பு(II) ஐதரைடானது குறிப்பிட்ட இரும்பு-ஐதரசன் கலப்புலோகங்களின் குறிப்பிட்ட சில வடிவங்களுக்கான அடிப்படையான சேர்மம் இதுவேயாகும்.
இதன் அமைப்புரீதியான பெயரான இரும்பு டைஐதரைடு, என்பது ஒரு செல்லத்தக்க பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட் பெயராகும். மேலும், இந்தப் பெயரானது அமைப்பை அடிப்படையாகக் கொண்டு பெயரிடப்படும் முறையின் விதிகளின்படி உருவாக்கப்பட்டதாகும். இதன் பெயர் இயல்பில் அதன் அமைப்பின் அடிப்படையில் அமைந்த ஒன்றாக இருப்பினும், இதனை இதே விகிதாச்சார வாய்ப்பாடு கொண்ட இதர சேர்மங்களிலிருந்து பிரித்தறிய முடிதில்லை.
ஒரு லூயி காரத்தின் ஒரு எதிர்மின்னி இரட்டையானது டைஐதரைடுஇரும்பின் மையமான இரும்புடன் சேர்ந்து ஒரு சேர்க்கை விளைபொருளைத் தரலாம்:
இவ்வாறு சேர்க்கப்பட்ட ஒரு எதிர்மின்னி இரட்டையின் காரணமாக, டைஐதரைடு இரும்பானது லூயி அமிலத் தன்மையைக் கொண்டுள்ளது. டைஐதரைடு இரும்பானது, லூயி காரங்களிலிருந்து நான்கு எதிர்மின்னி இரட்டைகளைக் கைப்பற்றும் திறனுடையதாகும்.
ஒரு நேர்மின்னியானது இச்சேர்மத்தின் மையத்திலுள்ள இரும்புடன் சிதைவுறு நேர்மின்னியேற்றத்தின் மூலம் இணையலாம்:
சிதைவுறு நேர்மின்னியேற்றமானது நேர்மின்னியை (H+
) கையகப்படுத்தும் நிகழ்வைக் கொண்டிருக்கும் காரணத்தால், குபாஸ் அணைவுச் சேர்மத்தை ([FeH(H
2)]+) இடைவினைவிளை பொருளாக உருவாக்குவதால், வலிமை குறைந்த லூயி காரங்களான, டைஐதரைடுஇரும்பு மற்றும் அதன் சேர்க்கைப் பொருள்கள், நீரைப் போன்றே பிரான்ஸ்டெட் லூயி காரத் தன்மையைக் கொண்டுள்ளன. இச்சேர்மங்கள் இரண்டு நேர்மின்னிகளை ஈர்க்கும் திறனைப் பெற்றுள்ளன. இதன் சிதைவுற்ற இணை அமிலங்கள் ஐதரைடுஇரும்பு (1+)மற்றும் இரும்பு (2+) (FeH+
மற்றும் Fe2+
).
வலிமை குறைந்த லூயி காரங்களின் சேர்க்கைப் பொருள்களின் நீரிய கரைசல்கள் டைஐதரைடுஇரும்பு மற்றும் ஐதரைடுஇரும்பு(1+) தொகுதிகளின் நீராற்பகுக்கப்படுவதால் நிலைத்தன்மையற்றவையாக இருக்கின்றன: