பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பெரசு செலீனேட்டு
| |
இனங்காட்டிகள் | |
15857-43-9[1] 70807-08-8 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
| |
பண்புகள் | |
FeSeO4 | |
வாய்ப்பாட்டு எடை | 198.8046 கி/மோல் (நீரிலி) 288.881 கி/மோல் (ஐந்துநீரேற்று) 324.91156 கி/மோல் (எழுநீரேற்று) |
தோற்றம் | பச்சை, நிலைப்புத்தன்மையற்ற படிகத் திண்மம் (எழுநீரேற்று) |
கரையும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இரும்பு(II) செலீனேட்டு (Iron(II) selenate) FeSeO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நீரிலி மற்றும் பல்வேறு நீரேற்று வடிவங்களில் இரும்பு(II) செலீனேட்டு காணப்படுகிறது. இச்சேர்மத்தின் ஐந்து நீரேற்றானது [Fe(H2O)4]SeO4•H2O என்ற கட்டமைப்பில் தொடர்புடைய இரும்பு(II) சல்பேட்டின் கட்டமைப்பை ஒத்துள்ளது.[2] பச்சை நிறத்தில் ஒரு படிகத் திண்மமாக எழுநீரேற்றும் அறியப்படுகிறது. ஆனாலிது நிலைப்புத்தன்மை அற்றதாகும்.[3]
80 பாகை செல்சியசு வெப்பநிலையில் நிறைவுற்ற சோடியம் செலினேட்டும் இரும்பு (II) சல்பேட்டும் வினைபுரிவதால் இரும்பு(II) செலினேட்டு தயாரிக்கப்படுகிறது. அறை வெப்பநிலையில் குளிர்விக்கும் போது, படிக இரும்பு(II) செலினேட்டு கரைசலில் இருந்து வீழ்படிவாகக் கிடைக்கிறது.[4]
இரும்பு மற்றும் செலீனிக் அமிலம் இரண்டும் வினைபுரிவதாலும் இரும்பு(II) செலினேட்டை உருவாக்குகிறது, ஆனால் ஓர் உடன் விளைபொருளும் உருவாகும்.:[3]
(NH4)2Fe(SeO4)2•6H2O மற்றும் K2Fe(SeO4)2•6H2O போன்ற இரட்டை உப்புகளான தட்டன் உப்புகளும் அறியப்படுகின்றன.[3]
இரும்பு (Fe2+) உப்பைத் தவிர பெரிக் எனப்படும் இரும்பு (Fe3+) உப்பு, இரும்பு(III) செலீனேட்டு, Fe2(SeO4)3 உப்புகளும் அறியப்படுகின்றன.[5] இருப்பினும், இரும்பு(II) செலீனைட்டு (FeSeO3) அறியப்படவில்லை. இரும்பு(III) இன் செலினைட்டு மற்றும் பைரோசெலீனைட்டு தொடர்பான செய்திகள் வெளியிடப்பட்டன.[6]