இருவளைய பாசுபேட்டு (Bicyclic phosphate) என்பது இருவளைய கரிமபாசுபேட்டுகளின் ஒரு வகையாகும். தீத்தடுப்பு, நிலைநிறுத்தி, ஆக்சிசனேற்றத் தடுப்பு போன்ற செயல்பாடுகளுக்காக இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. நிறமாலை ஆய்வுகளிலும் இதைப் பயன்படுத்துகிறார்கள் [1][2].
மூவிணைய-பியூட்டைல்பைசைக்ளோபாசுபரோதயோனேட்டு, மூவிணைய-பியூட்டைல்பைசைக்ளோபாசுபேட்டு, ஐசோபுரோப்பைல் பைசைக்ளோபாசுபேட்டு போன்ற இருவளைய பாசுபேட்டுகள் மிகுந்த நச்சுதன்மை கொண்டவையாகும். இவற்றின் நச்சுத்தன்மை நரம்புக் கடத்திகளின் நச்சுத்தன்மையுடன் ஒப்பிடத்தக்கவையாகும். இருப்பினும் இவற்றை அசிட்டைல்கோலினெசுட்ரேசு தடுப்பியாக கருதுவதில்லை[1]. இவை காம்மா-அமினோபியூட்டைரிக் அமில ஏற்பி எதிர்ப்பியாகச் செயல்படுகிறது. மேலும் வலிப்பூக்கி விளைவுகளை உண்டாக்கும் திறன் கொண்ட்தாகவும் உள்ளது[2][3][4].