இரெட்டு இரீசு Rhett Reese | |
---|---|
![]() | |
பணி | திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1992–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | செல்சி கிரிஸ்ப் (தி. 2016) [1] |
பிள்ளைகள் | 2[2] |
இரெட்டு இரீசு (ஆங்கில மொழி: Rhett Reese) என்பவர் ஒரு அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் சோம்பிலாண்ட் (2009), ஜி.ஐ. ஜோ: ரிட்டாலியேசன் (2023), டெட்பூல் (2016), டெட்பூல் 2 (2018), மற்றும் டெட்பூல் 3 (2024) ஆகிய படங்களின் திரைக்கதைகளை பால் வெர்னிக்குடன் இணைந்து எழுதியதற்காக மிகவும் பிரபலமானவர்.
இவர் பீனிக்ஸ், அரிசோனாவில் வளர்ந்தார், மேலும் அவரது உயர்நிலைப் பள்ளி நண்பர்களில் ஒருவர் பால் வெர்னிக்கின் சகோதரர் ஆவார். இவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு வெர்னிகைச் சந்தித்தபோது அவர் அப்பொழுது வளர்ந்து வரும் திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்தார். பின்னர் இருவரும் இணைந்து 'தி ஜோ ஸ்க்மோ ஷோ' என்ற நிகழ்ச்சியை உருவாக்கினார்கள்.[3][4]
இவர் தற்பொழுது தனது மனைவி, நடிகை, எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் செல்சி கிறிஸ்ப் ஆகியோருடன் லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கிறார்.
ஆண்டு | தலைப்பு | எழுத்தாளர் | நிர்வாகம் தயாரிப்பாளர் |
இயக்குநர் |
---|---|---|---|---|
2000 | டைனோசர் | ஆம் | இல்லை | எரிக் லெய்டன் ரால்ப் சொண்டாக் |
2001 | மோன்ஸ்டர்ஸ், இன்க் | ஆம் | இல்லை | பீட் டாக்டர் |
2004 | கிலிஃபோர்ட்'ஸ் ரியலி பிக் மூவி | ஆம் | இல்லை | ராபர்ட் ராமிரெஸ் |
குருல் இன்டன்சன் 3 | ஆம் | இல்லை | இசுகாட் ஜீஹல் | |
2005 | டார்சன் II | ஆம் | இல்லை | பிரையன் சுமித் |
2009 | சோம்பிலாண்ட் | ஆம் | ஆம் | ரூபன் பிளைஷர் |
2013 | ஜி.ஐ. ஜோ: ரிட்டாலியேசன் | ஆம் | இல்லை | ஜான் எம்.சு |
2016 | டெட்பூல் | ஆம் | ஆம் | டிம் மில்லர் |
2017 | லைப் | ஆம் | இல்லை | டேனியல் எசுபினோசா |
2018 | டெட்பூல் 2 | ஆம் | ஆம் | டேவிட் லீட்ச் |
2019 | 6 அண்டர்கிரவுண்ட் | ஆம் | ஆம் | மைக்கேல் பே |
சோம்பிலாண்ட்: டபுள் தாப் | ஆம் | ஆம் | ரூபன் பிளீஷர் | |
2022 | இசுபைடர்ஹெட் | ஆம் | இல்லை | ஜோசப் கோசின்ஸ்கி |
2023 | கோஸ்டேட் | ஆம் | இல்லை | டெக்ஸ்டர் பிளெட்சர் |
2024 | டெட்பூல் 3 | ஆம் | இல்லை | சவுன் அடம் இலெவி |