இரெண்டாபியா | |
---|---|
இரெண்டாபியா கோசி | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | இராணிடே
|
பேரினம்: | |
இனம்: | இ. கோசி
|
இருசொற் பெயரீடு | |
இரெண்டாபியா கோசி சான் மற்றும் பலர், 2016[1] | |
மாதிரி இனம் | |
இரெண்டாபியா கோசி பெளலஞ்சர், 1892 | |
சிற்றினம் | |
சிற்றினம் |
இரெண்டாபியா (Rentapia) என்பது பபோனிடே குடும்பத்தைச் சேர்ந்த தேரைப் பேரினம் ஆகும்.[2][3] இவை தென்கிழக்கு ஆசியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரிகள் ஆகும். இவை மலாய் தீபகற்பத்தில் (தெற்கு தீபகற்ப தாய்லாந்து, போர்னியோ. சுமத்ரா உட்பட) காணப்படுகிறது.[2] இப்பேரினம் 2016ஆம் ஆண்டில் பெடோசுடிப்களின் பலதொகுதிமரபு உயிரினத் தோற்றத்திற்குத் தீர்வு காணும் வகையில் தோற்றுவிக்கப்பட்டது.[1][2]
"ஒரு சிறந்த போர் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் மலேசியத் தேசிய வீரரான" புகழ்பெற்ற இபான் போர்வீரர் லிபாவ் ரென்டாப்பை இந்த பேரினப் பொதுவான பெயர் கௌரவிக்கிறது.[1]
இரெண்டாபியா பேரினத்தில் ஒப்பீட்டளவில் பெரிய தேரைகள் உள்ளன. இப்பேரினத்தில் உள்ள பெரிய சிற்றினமாக ரெண்டாபியா கோசி உள்ளது. இதில் ஆண் தேரைகள் 80 மிமீ நீளம் வரை வளருகின்றன. பெண் தேரைகள் 105 மிமீ வரை நீளமுடையன. உட்புற மூளை முகடுகள் இல்லை. பரோட்டிட் சுரப்பிகள் பெரியதாகவும் தனித்துவமாகவும் உள்ளன. மேலும் இவை முட்டை, வட்ட அல்லது முக்கோண வடிவத்தில் இருக்கலாம். விரல்களில் அடித்தள வலைப்பின்னல் மற்றும் நுனிகள் உள்ளன. இவை தட்டையான வட்டுகளாக விரிவடைந்துள்ளன. நான்காவது கால்விரலைத் தவிர அனைத்துக் கால்விரல்களும் முழுமையாக வலைபோன்று இணைக்கப்பட்டுள்ளன. ஆண் தேரைகள் கலவித்திண்டினைக் கொண்டுள்ளன.[1]
வயது வந்த இரெண்டாபியா முதன்மையாகத் தாவர உண்ணியாக உள்ளன. சிறிய முதல் மிதமான அளவிலான வன நீரோடைகளைச் சுற்றியுள்ள கரையோரத் தாவரங்களில் வாழ்கிறது. முட்டைகள் சிறியதாகவும், நிறமி கொண்டதாகவும், சரங்களாக இடப்படுகின்றன.[1]
இப்பேரினத்தில் அங்கீகரிக்கப்பட்ட மூன்று சிற்றினங்கள் உள்ளன. இவை:
முன்னர் அங்கீகரிக்கப்பட்ட இரெண்டாபியா இரக்கோசா என்பது இரெ. எவெரெட்டி சிற்றினத்தினை ஒத்ததாகும்.[2]