இரெண்டாபியா எவெரெட்டி

எவெரெட்டி ஆசிய மரத்தேரை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
இராணிடே
பேரினம்:
இனம்:
இ. எவெரெட்டி
இருசொற் பெயரீடு
இரெண்டாபியா எவெரெட்டி
(பெளலஞ்சர், 1896)
வேறு பெயர்கள் [2]
  • நெக்டோப்ரைன் எவெரெட்டி பெளலஞ்சர், 1896
  • பெடோசுடிப்சு எவெரெட்டி (பெளலஞ்சர், 1896)
  • பெடோசுடிப்சு இரக்கோசசு இங்கர், 1958
  • இரெண்டாபியா எவெரெட்டி (இங்கர், 1958)

இரெண்டாபியா எவெரெட்டி (Rentapia everetti), எவெரெட்டி ஆசிய மரத்தேரை அல்லது பளிங்கு மரத்தேரை என்பது பபோனிடே குடும்பத்தில் உள்ள ஒரு தேரைச் சிற்றினம் ஆகும். இது போர்னியோவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. மலேசியா, புரூணை, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் காணப்படுகிறது.[1][2]

இரெண்டாபியா எவெரெட்டி என்பது மலைப்பாங்கான தாழ் நிலத்திலும், துணை மலைப்பாங்கான, வெப்பமண்டல முதன்மை ஈரமான காடு, இரண்டாம் நிலை காடுகளிலும் காணப்படும் ஒரு தாவர உண்ணி வகைத் தேரை ஆகும். இந்தத் தேரையின் அளவு குறித்த தகவல்கள் தெரியவில்லை.[3] சிறிய, மெதுவாக நகரும், தெளிவான, பாறையுள்ள நீரோடைகளில் இனப்பெருக்கம் நடைபெறுகிறது.[1]

பெரிய முட்டை வடிவ பரோடோயிடு சுரப்பிகள், ஏராளமான வட்டமான மருக்கள் மற்றும் கூர்மையான முதுகுப்புற மடிப்பு உள்ளிட்ட உருவப் பண்புகளால் இரெண்டாபியா எவெரெட்டி அடையாளம் காணப்படுகின்றன.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 IUCN SSC Amphibian Specialist Group (2018). "Rentapia everetti". IUCN Red List of Threatened Species 2018: e.T114108750A115741972. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T114108750A115741972.en. https://www.iucnredlist.org/species/114108750/115741972. பார்த்த நாள்: 17 November 2021. 
  2. 2.0 2.1 Frost, Darrel R. (2019). "Rentapia everetti (Boulenger, 1896)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 27 September 2019.
  3. Chan, Kin Onn; Grismer, L Lee; Zachariah, Anil; Brown, Rafe M; Abraham, Robin Kurian (January 2016). "Polyphyly of Asian tree toads, genus Pedostibes Günther, 1876 (Anura: Bufonidae), and the description of a new genus from Southeast Asia". PLOS ONE 11 (1): e0145903. doi:10.1371/journal.pone.0145903. பப்மெட்:26788854. Bibcode: 2016PLoSO..1145903C. 
  4. Chandramouli, S R; Amarasinghe, A A Thasun (June 2016). "Taxonomic reassessment of the arboreal toad genus Pedostibes Günther 1876 (Anura: Bufonidae) and some allied oriental bufonid genera". Herpetologica 72 (2): 137–147. doi:10.1655/HERPETOLOGICA-D-15-00053.