இரேணுகா யாதவ்

இரேணுகா யாதவ்
தனித் தகவல்
பிறப்பு18 சூலை 1994 (1994-07-18) (அகவை 30)
சத்தீசுகர், இந்தியா
விளையாடுமிடம்நடுகள ஆட்டக்காரர்
தேசிய அணி
India
பதக்க சாதனை
பெண்கள் வளைகோல் பந்தாட்டம்
நாடு  இந்தியா

இரேணுகா யாதவ் (Renuka Yadav) இந்தியாவின் வளைகோல் பந்தாட்ட வீராங்கணை ஆவார். 1994 [1] ஆம் ஆண்டு சூலை மாதம் 18 இல் இவர் பிறந்தார். இரியோடி செனிரோ 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் விளையாடுவதற்கு தகுதி பெற்ற மிக இளவயது விளையாட்டு வீராங்கனை என்ற பெருமை இவருக்கு உரியதாகும். சத்தீசுகர் மாநிலத்தின் இராச்நந்கான் மாவட்டத்தில் இருந்து இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இம்மாவட்டத்தை ’இந்தியாவின் வளைகோல் நாற்றங்கால்’ என்ற புனைப்பெயரால் அழைப்பர். இலெசுலி கிளாடியசிற்கு அடுத்ததாக ஒலிம்பிக் விலையாட்டுப் போட்டிகளில் விளையாட்டிற்குத் தகுதிபெற்ற இரண்டாவது சத்தீசுகர் பெண் ரேணுகா யாதவ் என்பது இவருக்கு மேலும் ஒரு சிறப்பாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Renuka Yadav profile". Hockey India இம் மூலத்தில் இருந்து 14 ஏப்ரல் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160414114936/http://hockeyindia.org/team/renuka-yadav-2.html. பார்த்த நாள்: 18 July 2013.