இரைப்பை கவசம்

இரைப்பைக் கவசம் (Gastric shield) என்பது ஈரோட்டுடலிகள், தந்தம் ஓடுகள் மற்றும் சில வயிற்றுக்காலிகளின் செரிமானப் பாதையில் உள்ள ஒரு உறுப்பு ஆகும். பொதுவாக இது உரலும் உலக்கையும் சுழல்வது போன்று செயல்படும். வயிற்றிலிருந்து செரிமான நொதிகளைக் கடத்தும் நுண்குழாய்கள் இந்த இரைப்பைக் கவசத்தினை ஊடுருவிச் செல்கின்றன. சிராய்ப்பு விளைவுகளிலிருந்து வயிற்றுப் புறணியின் உயிரணுக்களைப் பாதுகாக்கும் பணியினை இரைப்பைக் கவசம் மேற்கொள்கிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Saleuddin, A. S.M.; Wilbur, Karl M. (1983). The Mollusca: Physiology, Part 2. Academic. p. 95. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780323139212.