அமதகோதகே டான் இரோஷி அபய்சிங்கே (Amathagodage Don Hiroshi Abeysinghe) (பிறப்பு:நவம்பர் 2, 1978) முன்னாள் இலங்கைத் துடுப்பாட்டக்காரர் மற்றும் சர்வதேச பயுற்சியாளரும் ஆவார்.
இரோஷி 1999 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை சர்வதேச போட்டிகளில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடினார். இவர் துடுப்பாட்டத்த்தில் சகலத் துறையறாக விளையாடினார்.வலதுகை மட்டையாளர் மற்றும் வலதுகை புறத் திருப்பப் பந்துவீச்சாளரும் ஆவார். 1999 ஆம் ஆண்டில் பாக்கித்தான் பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிராகவும், இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அனிக்கு எதிரான தொடரிலும் இலங்கை அணிக்காக விளையாடினார்.
2000 ஆம் ஆண்டில் நியூசிலாந்தில் நடைபெற்ற பெண்கள் உலகத் துடுப்பாட்டக் கிண்னத்தில் இவர் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார்.[1] அந்தத் தொடரில் ஏழு போட்டிகளில் 186 ஓட்டங்கள் எடுத்து அந்தத் தொடரில் இலங்கை அணியில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார்[2]. அந்தத் தொடரில் இங்கிலாந்து பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 116 பந்துகளில் 57 ஓட்டங்கள் எடுத்தார். மேலும் அயர்லாந்து பென்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 112 பந்துகளில் 52 ஓட்டங்கள் எடுத்தார்.[3]
பெண்கள் துடுப்பாட்ட உலகக்கிண்னத்திற்குப் பிறகு சனவரி 2002 ஆம் ஆண்டில் பாக்கித்தான் பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.[1] இந்தத் தொடரின் முதல் போட்டியில் 65 பந்துகளில் 57 ஓட்டங்களும் நான்காவது போட்டியில் 103 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 71 ஓட்டங்களும் எடுத்தார்.[3] 2002 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.
2003 ஆம் ஆண்டில் மேற்கிந்திய பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடும் அணியில் இடம்பெற்றார்.
2005 ஆம் ஆண்டில் இங்கிலாந்து பென்கள் துடுப்பாட்ட அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அந்தத் தொடரில் இலங்கை அணியின் துணை தலைவராக விளையாடினார்.2005 ஆம் ஆண்டில் ஆசியக் கிண்னத் தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.
2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசியக் கிண்னத் துடுப்பாட்டத் தொடரில் இறுதியாக விளையாடினார். அப்போது அவர் 3 ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார்.[1]
சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு பயிற்சியாளராகத் தகுதி பெற்றார்.
2008 ஆம் ஆண்டில் இலங்கை பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு உதவி பயிற்சியாளராக பணியாற்றினார்.2012ஆம் ஆண்டு முதல் 2015 வரை இலங்கையில் சுற்றுப் பயணம் செய்த பாக்கித்தான், தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து பெண்கள் துடுப்பாட்ட அணிகளுக்கு தொடர்பு அலுவலராக பணியாற்றியுள்ளார்.செப்டம்பர், 2016 ஆம் ஆண்டில் இலங்கையில்சுற்றுப்பயணம் செய்து விளையாடிய ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணி மற்றும் நவம்பர் 2016 இல் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியிலும் மேலாளராகப் பணியாற்றினார். இவரின் தலைமையின் கீழ் விளையாடிய உள்ளூர்ப் போட்டிகளில் இலங்கைத் துடுப்பாட்ட அணி 5 முறை பெண்கள் உலகக் கிண்ணத்தை வென்றது. 2017 ஆம் ஆண்டில் அபுதாபி பெண்கள் துடுப்பாட்ட அணியின் பயிற்சியாளராக பணியாற்றினார்.