இல. செ. கந்தசாமி | |
---|---|
தன்னம்பிக்கைப் பேராசிரியர் | |
பிறப்பு | கந்தசாமி 1939 திசம்பர் 24 இலக்கபுரம், இராசிபுரம், தமிழ்நாடு |
இறப்பு | ஏப்ரல் 6, 1992 கோயமுத்தூர் | (அகவை 52)
இருப்பிடம் | கோயமுத்தூர் |
தேசியம் | இந்தியர் |
கல்வி | புலவர், கலை முதுவர், முனைவர் |
பணி | தமிழ்ப் பேராசிரியர் |
பணியகம் | தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | வேளாண்மைத் தமிழ் |
சமயம் | இந்து |
வாழ்க்கைத் துணை | கமலம் |
இல. செ. கந்தசாமி (L. S. Kandasamy) (திசம்பர் 24, 1939 – ஏப்ரல் 6, 1992), தமிழ்ப் பேராசிரியரும் எழுத்தாளரும் இதழாளரும் ஆவார். இவர் தனது வாழ்க்கையை பள்ளி ஆசிரியராகத் தொடங்கி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையின் தலைவராக உயர்ந்தவர். இவர் புதினங்கள், புதுக்கவிதைகள், தன்முன்னேற்ற நூல்கள், உழவு குறித்த நூல்களை எழுதியுள்ளார்.
இல. செ. கந்தசாமி 1939 திசம்பர் 24 ஆம் நாள் இராசிபுரத்திற்கு அருகில் உள்ள இலக்கபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தார்.
கந்தசாமி பள்ளிக் கல்வியை தனது ஊரிலேயே பெற்றார். 1957 ஆம் ஆண்டு முதல் 1961 ஆம் ஆண்டு வரை கல்லூரியில் பயின்று தமிழ்ப் புலவர் பட்டம் பெற்றார். பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிக்கொண்டே தனியே பயின்று கலை முதுவர் பட்டத்தில் பல்கலைக் கழக அளவில் முதன்மையானராகத் தேறினார்.
1978 ஆம் ஆண்டில் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்விற்காகப் பதிவு செய்தார். 1985 நவம்பர் 13 ஆம் நாள் முனைவர் பட்டம் பெற்றார்.
கமலம் என்பவரை கந்தசாமி 1967 ஆகத்து 21 ஆம் நாள் மணந்தார்.
1961ஆம் ஆண்டில் தமிழாசிரியராக உயர்நிலைப் பள்ளியொன்றில் பணியாற்றினார். 1972ஆம் ஆண்டில் கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியேற்றார்.
வ.எண் | ஆண்டு | நூல் | வகை | பதிப்பகம் | குறிப்பு |
01 | 1973 | திருக்குறளில் வேளாண்மை | ஆய்வு | ? | |
02 | 1973 | வேளாண்மையும் பண்பாடும் [2] | ஆய்வு | ? | |
03 | 1973 | இலக்கியத்தில் வேளாண்மைக் கலைச்சொற்கள் | ஆய்வு | ? | |
04 | 1977 | ஓ… அன்றில் பறவைகளே! | நெடுங்கதை | ? | |
05 | 1978 | குறிக்கோளை நோக்கி | தன்னாளுமை | ? | |
06 | 1978 | இந்த மண்ணின் மக்கள் | தன்னாளுமை | ? | |
07 | 1978 | சித்திரைக் கனி | நெடுங்கதை | ? | |
08 | 1980 | கிராமங்களை நோக்கி | கட்டுரைகள் | ? | |
09 | 1981 | இதுவோ நாகரிகம்? | கட்டுரைகள் | ? | |
10 | 1982 | கிராமத்து ஓவியங்கள் | நெடுங்கதை | ? | |
11 | 1983 | போர்வைகள் | நெடுங்கதை | ? | |
12 | 1984 | கிராமங்களுக்குள்ளே | கட்டுரை | ? | |
13 | 1985 | முன்னேற்றத்திற்கு மூன்றே படிகள் | தன்னாளுமை | ? | |
14 | 1986 | தனிமனிதச் சிக்கல்களும் தீர்வுகளும் | தன்னாளுமை | ? | |
15 | 1986 | காலச்சுவடுகள் | கட்டுரைகள் | ? | |
16 | 1987 | சிந்தனை மலடுகள் | கட்டுரைகள் | ? | |
17 | 1987 | ஐரோப்பிய அமெரிக்கப் பயண அனுபவங்கள் | கட்டுரைகள் | ? | |
18 | 1987 | எனது சிந்தனைக் களமும் காலமும் | கட்டுரைகள் | ? | |
19 | 1988 | இளைய தலைமுறைக்கு | கட்டுரைகள் | ? | |
20 | 1988 | வளமான வாழ்விற்கு | கட்டுரைகள் | ? | |
21 | 1988 | முன்னேற மூன்றே சொற்கள் | கட்டுரைகள் | ? | |
22 | 1988 | இதோ… தன்னம்பிக்கை | தன்னாளுமை | ? | |
23 | 1991 | கீதாஞ்சலி | மொழிபெயர்ப்பு | ? | இரபீந்திரநாத் தாகூர் எழுதிய நூலின் மொழிபெயர்ப்பு |
24 | ? | வேளாண்மைப் பழமொழிகள் | ஆய்வு | கலைச்செல்வம் பதிப்பகம், கோயம்புத்தூர் | |
25 | ? | உழவர்கள் பேச்சுமொழி | ஆய்வு | ? | |
26 | ? | வேளாண்மை மரபுகள் | ஆய்வு | ? | |
27 | ? | உயிரியல் தொழில்நுட்ப அகராதி | அகராதி | ? | |
28 | ? | உலக வேளாண்மைப் பொருட்காட்சி | கட்டுரைகள் | ? | |
29 | ? | நேரமே நமது செல்வம் | கட்டுரைகள் | ? | |
30 | ? | வெற்றிக்கு ஒரே வழி | கட்டுரைகள் | ? | |
31 | ? | சலனங்கள் சபலங்கள் மனிதர்கள் | கட்டுரைகள் | ? | |
32 | ? | புதுக்கவிதை ஒரு பார்வை | கட்டுரைகள் | ? |
கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட ஏர் உழவன் என்னும் இதழின் ஆசிரியராக 1975ஆம் ஆண்டில் கந்தசாமி பொறுப்பேற்றார். பின்னர் வளரும் வேளாண்மை என்னும் இதழின் ஆசிரியப் பொறுப்பையும் ஏற்றார்.
1988 ஆம் ஆண்டில் தன்முன்னேற்றத்தை வலியுறுத்தும் தன்னம்பிக்கை என்ற மாத இதழைத் தொடங்கினார். அவரது மறைவுக்குப் பிறகு அவரது உறவினர்களும் நண்பர்களும் இவ்விதழைத் தொடர்ந்து நடத்தி வருகின்
கந்தசாமி 1986ஆம் ஆண்டில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்சு ஆகிய நாடுகளுக்கு 40 நாள்கள் பயணமாகச் சென்று திரும்பினார்.
1987 ஆம் ஆண்டில் தாய்லாந்து, ஆங்காங்கு, தென்கொரியா, சப்பான், பிலிப்பைன்சு, சிங்கப்பூர் ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சென்று திரும்பினார்.
1988 ஆம் ஆண்டில் ஆறாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்துகொள்ள மலேசியா சென்றார். பின்னர் அங்கிருந்து சிங்கப்பூர் சென்று திரும்பினார்.
1990 ஆம் ஆண்டில் இசுரேல், சோர்டான், எகிப்து ஆகிய நாடுகளுக்குச் சென்று திரும்பினார்.
இல. செ. கந்தசாமி 1992 ஏப்ரல் 6 ஆம் நாள் கோயமுத்தூரில் மரணமடைந்தார்.