இலக்கியத்திலும், பிரபலமான கலாச்சாரத்திலும் வீராங்கனைகள் (Women warriors in literature and culture ) என்ற சித்தரிப்பு வரலாறு, இலக்கிய ஆய்வுகள், திரைப்பட ஆய்வுகள், நாட்டுப்புற வரலாறு, புராணங்கள் போன்றவற்றில் ஒரு ஆய்வுப் பொருளாகும். பெண் போர்வீரரின் பழமையான உருவம் சில கலாச்சாரங்களில் நடக்கும் ஒரு சாதாரண விஷயத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகவும். அதே சமயம் ஒரு மிகைப்படுத்தப்பட்ட ஒரு கருத்தாகவும், போர், வன்முறை, ஆக்கிரமிப்பு ஆகியவற்றை ஆண்பாலினம் மட்டுமே செய்யப்படுவதையும் எதிர்க்கிறது.[1] :269 இந்த வழக்கத்தை மீறும் நிலைப்பாடு பெண் வீராங்கனையை சமூக சக்தியாகவும், பாலின பாத்திரங்களைச் சுற்றியுள்ள பேச்சுகளுக்கான ஒரு முக்கிய விசாரணை தளமாகவும் ஆக்குகிறது.
இந்துசமயப் புராணங்களில் அருச்சுனனின் மனைவியான சித்ராங்கதை தனது தந்தையின் படைகளின் தளபதியாகவும் இருந்தார்.
அமெசான்கள் கிரேக்க புராணத்தில் பெண் வீரர்களின் முழு பழங்குடியினராவர். "அமெசான்" நவீன சமுதாயத்திலும் பண்டைய சமுதாயத்திலும் வீராங்கனைகளுக்கு ஒரு பெயராக மாறியுள்ளது.
பிரித்தன் புராணங்களில், கோர்தெலியா இராணி தனது சிம்மாசனத்திற்காக பல போட்டியாளர்களை எதிர்த்துப் போராடியுள்ளார். இராணுவத்தை தனிப்பட்ட முறையில் தனது போர்களில் வழிநடத்தியதுடன், இறுதியில் அவர் துக்கத்தால் தற்கொலை செய்து கொள்ளும் வரை, தனது சொந்த குடும்ப உறுப்பினர்களிடமிருந்து தனது ஆட்சியைக் காத்துக்கொண்டார். பண்டைய பிரித்தன் வரலாற்றில் மற்றொரு எடுத்துக்காட்டு ரோமானிய பேரரசிற்கு எதிராக ஒரு கிளர்ச்சியை வழிநடத்திய வரலாற்று ராணி பௌடிகா என்பவராவார்.
கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் தெலிசிலாவின் கட்டளையின் கீழ் ஆர்கோசின் பெண்கள் கிளியோமினசு அரசன் மற்றும் எசுபார்டான்களுக்கு எதிராக எவ்வாறு போராடினார்கள் என்பதை கிரேக்க-ரோமானிய வரலாற்றாசிரியர் புளூடாக் தனது ஆன் தி பிரேவரி ஆஃப் உமன் என்ற நூலில் விவரிக்கிறார்.[2][3]
இந்த் பிந்த் உத்பா என்பவர் 6 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இசுலாமிய மதத்திற்கு மாறிய ஒரு அரபு பெண்ணாவார். இவர் 636 இல் இயர் மௌக் போரில் பங்கேற்றுள்ளார். உரோமானியர்களுடன் சண்டையிட்டு ஆண் வீரர்களை தன்னுடன் சேர ஊக்குவித்தார் [4]
கவ்லா பிந்த் அல்-அசுவர் 7 ஆம் நூற்றாண்டில் ஒரு முக்கிய முஸ்லீம் வீராங்கனையாக இருந்துள்ளார். இன்று சிரியா, ஜோர்தான், பலத்தீன் நாடு ஆகியவற்றின் போர்களில் முன்னணி வகித்தார்.[5]
ஜோன் ஆப் ஆர்க் 15 ஆம் நூற்றாண்டில் ஒரு போர்வீரராக இருந்தார். மேலும் நூறாண்டுப் போரில் தனது பங்கிற்காக பிரான்சில் ஒரு கதாநாயகியாக கருதப்பட்டார். பின்னர் அவர் ஒரு உரோமன் கத்தோலிக்க புனிதராக நியமிக்கப்பட்டார்.
பண்டைய பாரசீக காவியமான தி சானாமாவில் "கோர்டாபரிட்", அரபு காவிய இலக்கியத்தில் தெல்கெம்மா, முலானில் காமிலா, ஈனெய்டில் பெனிபோப், பிரிட்டோமார்ட்டில் எட்மண்ட் ஸ்பென்சரின் தி பேரி குயின், ஆர்லாண்டோ புரியோசோவில் பிராட்மண்டே மற்றும் மர்பிசா, லா ஜெருசலேம் லிபரட்டாவில் குளோரிண்டா, எர்மினியா மற்றும் கிரெண்டலின் தாய் போன்றவர்கள் இலக்கிய பெண்களில் அடங்குவர்
சீன, சப்பானிய தற்காப்புக் கலைத் திரைப்படங்கள் உட்பட பல கலாச்சாரங்களில் வீராங்கனைகள் ஒரு நீண்ட பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக சித்தரிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் மேற்கத்திய பார்வையாளர்களை அவர்கள் அணுகுவதும் முறையிடுவதும் மிகச் சமீபத்தியது. இது 1990 முதல் அமெரிக்க ஊடகங்களில் பெருகிய முறையில் பெண் கதாநாயகிகளின் எண்ணிக்கையுடன் ஒத்துப்போகிறது.[6] :136 [7] :25