இலக்சபான நீர்வீழ்ச்சி Laxapana Falls | |
---|---|
அமைவிடம் | அட்டன், இலங்கை |
ஆள்கூறு | 6°54′N 80°30′E / 6.9°N 80.50°E |
வகை | வடிநிலம் |
ஏற்றம் | 720மீ |
மொத்த உயரம் | 126மீ |
வீழ்ச்சி எண்ணிக்கை | 1 |
நீர்வழி | மஸ்கெலிய ஓயா |
உயரம், உலக நிலை | 625 |
இலக்சபான அருவி (Laxapana Falls) அல்லது இலக்சபான நீர்வீழ்ச்சி என்பது இலங்கையில் உள்ள அருவிகளில் எட்டாவது பெரியதும்,[1] 126 மீட்டர் உயரமானதுமான நீர்வீழ்ச்சி ஆகும்.[2] இது உலகில் 625 ஆவது பெரிய அருவிகளில் ஒன்றுமாகும். இது இலங்கையின் மத்திய மாகாணத்தின் நுவரெல்லியா மாவட்டத்தில், அட்டன் நகரில் அமைந்துள்ளது. மஸ்கெலிய ஓயா, கெஹெல்கமுவை ஓயா சங்கமிக்கும் இடத்திற்கு அருகே மஸ்கெலியா ஓயா பெருக்கெடுத்து பள்ளத்தாக்கை நோக்கிப் பாய்வதனூடாக, இந்த அருவி தோன்றியுள்ளது. நோர்ட்டன் பிரிட்ஜ்-மஸ்கெலிய வீதியில் அமைந்துள்ள இலக்சபான நீர் மின் நிலையம் 50 மெகாவாட் மின்சாரத்தையும், புதிய இலக்சபான நீர்மின் நிலையம் 100 மெகவாட் மின்சாரத்தையும் உற்பத்தி செய்யவல்லன.