![]() | |||||||||||||||||||||
| |||||||||||||||||||||
வாக்களித்தோர் | 99.11% | ||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||
|
2022 இலங்கை அரசுத்தலைவர் தேர்தல் 2022 சூலை 20 அன்று நடைபெற்றது. முன்னாள் அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச சூலை 14 அன்று பதவி விலகியதை அடுத்து அவரது பதவிக்காலம் முடியும் வரை 9-ஆவது அரசுத்தலைவரைத் தேர்ந்தெடுக்க நாடாளுமன்றத் உறுப்பினர்களிடையே இரகசிய வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.[1][2] இத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் சூலை 19 அன்று நாடாளுமன்றத்தில் பரிந்துரைக்கப்பட்டனர்.[3][4]
2022 சூலை 20 இல் நடந்த இரகசிய வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகள் பெற்று நிறைவேற்றதிகாரம் கொண்ட 8-ஆவது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5][6]
1981 ஆம் ஆண்டின் அரசுத்தலைவர் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின்படி, "அரசியலமைப்புச் சட்டத்தின் 40-ஆவது பிரிவில் கூறப்பட்டபடி, அரசியலமைப்பின் 38 வது பிரிவு பத்தி (1) இன் படி அரசுத்தலைவரின் பதவி வெறுமையாக இருந்தால், நாடாளுமன்றம் அதன் உறுப்பினர் ஒருவரை அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கும். அரசுத்தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்படுவதற்கு தகுதியுடைய அதன் உறுப்பினர்களில், பதவியை விட்டு வெளியேறும் அரசுத்தலைவரின் பதவிக்காலம் முடிவடையாத காலத்திற்கு பதவியில் இருக்க வேண்டும்."[7][8] எனவே, கோட்டாபய ராஜபக்ச சூலை 14 அன்று பதவி விலகியதைத் தொடர்ந்து 2024 நவம்பரில் முடிவடையவிருந்த ராஜபக்சவின் எஞ்சிய பதவிக் காலத்திற்குப் பணியாற்றுவதற்கு நாடாளுமன்றத்தால் அரசுத்தலைவர் ஒருவர் 30 நாட்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.[1][9] இந்த செயல்முறை இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகரால் வழிநடத்தப்படுகிறது. இத்தேர்தலில் சபாநாயகருக்கும் வாக்களிக்கும் உரிமை உள்ளது.[8] வாக்குப்பதிவு இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடைபெறும்.[10]
2022 சூலை 19 அன்று, அரசுத்தலைவர் பதவிக்கான பரிந்துரைகள் நாடாளுமன்றத்தில் கோரப்பட்டது.[11] இலங்கை பொதுசன முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன ரணில் விக்கிரமசிங்கவை முன்மொழிந்தார், அமைச்சர் மனுச நாணயக்கார அதனை உறுதிப்படுத்தினார். அரிணி அமரசூரியா அனுர குமார திசாநாயக்கவை முன்மொழிய விஜித ஹேரத் உறுதிப்படுத்தினார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, டளஸ் அளகப்பெருமவை முன்மொழிய, ஜி. எல். பீரிசு அதனை வழிமொழிந்தார்.[12] நாடாளுமன்றத்தின் பொதுச் செயலரும், தெரிவத்தாட்சி அலுவலருமான தம்மிக்க தசநாயக்க வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தார்.[13]
இரகசிய வாக்கெடுப்பு மூலம் சனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்காக நாடாளுமன்றம் சூலை 20 காலை 10:00 மணிக்குக் கூடியது, ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு வாக்கு மட்டுமே உரிமை உண்டு. பல வேட்பாளர்கள் இருக்கும்போது விருப்பங்களைக் குறிக்கும் விருப்பத்துடன், வேட்பாளரின் பெயருக்கு முன்னால் உள்ள பெட்டியில் "1" என்ற எண்ணைக் கொண்டு அந்த வாக்கைக் குறிக்க வேண்டும்.[8]
வாக்களித்த பிறகு, ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதிவான வாக்குகள் எண்ணப்படும். ஒரு வேட்பாளர் பதிவான செல்லுபடியாகும் வாக்குகளில் பாதிக்கும் மேல் பெற்றால், தேர்தல் நடத்தும் அலுவலர், அந்த வேட்பாளர் அரசுத்தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக உடனடியாக அறிவிப்பார். எந்த வேட்பாளரும் பதிவான செல்லுபடியாகும் வாக்குகளில் பாதிக்கும் மேல் பெறவில்லை என்றால், குறைந்த வாக்குகள் பெற்ற வேட்பாளர் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார். போட்டியிலிருந்து நீக்கப்பட்ட வேட்பாளருக்கு முதல் விருப்பு வாக்களித்த ஒவ்வொரு உறுப்பினரும் தங்களின் இரண்டாவது விருப்பம் தெரிவித்திருந்தால், அவர்கள் அந்தந்த வேட்பாளருடன் சேர்க்கப்படுவார்கள். எந்த வேட்பாளரும் செல்லுபடியாகும் வாக்குகளில் பாதிக்கு மேல் பெறாவிட்டாலும், ஒவ்வொரு கணக்கீட்டிலும் குறைந்த வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் போட்டியில் இருந்து நீக்கப்பட்டு, இரண்டாவது, மூன்றாவது போன்றவற்றில் மீதமுள்ள வேட்பாளர்களுக்கு வாக்குகள் சேர்க்கப்படும். அவ்வாறு, எந்த ஒரு வேட்பாளரும் செல்லுபடியாகும் வாக்குகளில் பாதியைப் பெறவில்லை என்றால், மேற்கண்டவாறு வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு இடையே வாக்குகள் சமமாக இருக்கும் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.[14]
நாள் | நிகழ்வு |
---|---|
14 சூலை 2022, வியாழன் | நாடாளுமன்ற சபாநாயகர் அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச அனுப்பி வைத்த பதவி விலகல் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார். |
15 சூலை 2022 வெள்ளி | கோட்டாபய ராசபக்சவின் பதவி விலகல் சபாநாயகரால் உறுதிப்படுத்தப்பட்டது. |
ஏழு நாட்களுக்குள் நாடாளுமன்றம் ஊடாக புதிய அரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என சபாநாயகர் அறிவித்தார். | |
16 சூலை 2022 சனி | நாடாளுமன்றத்தின் பொதுச் செயலர் தம்மிக்க தசாநாயக்க அரசுத்தலைவர் பதவி வெற்றிடமாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். |
17 சூலை 2022 ஞாயிறு | |
18 சூலை 2022 திங்கள் | பதில் அரசுத்தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடு முழுவதற்கும் அவசரநிலையை அறிவித்தார். |
19 சூலை 2022 செவ்வாய் | நாடாளுமன்றத்தில் அரசுத்தலைவர் பதவிக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்டன. |
20 சூலை 2022 புதன் | நாடாளுமன்றம் இரகசிய வாக்கெடுப்பு மூலம் புதிய அரசுத்தலைவரைத் தேர்ந்தெடுத்தது. |
வேட்பாளர் | பதவியும், தொகுதியும் | தேதி | முன்மொழிவு/ வழிமொழிவு |
குறிப்புகள் | மேற். | |
---|---|---|---|---|---|---|
![]() டளஸ் அளகப்பெரும (63) இலங்கை பொதுசன முன்னணி |
பதவி எதுவும் இல்லை ஊடக அமைச்சர் (2021–2022) மாத்தறை |
15 சூலை 2022 | சஜித் பிரேமதாச ஜி. எல். பீரிஸ் |
சஜித் பிரேமதாச தான் போட்டியிடப்போவதில்லை என அறிவித்து, தனது கட்சி டலஸ் அளகப்பெருமவை ஆதரிக்கும் எனத் தெரிவித்தார்.[15] இசுக, தமுகூ, ததேகூ, அஇமகா, இமுகா, மற்றும் இபொமு கட்சியின் சில உறுப்பினர்கள் அளகப்பெருமவிற்கு வாக்களிக்கவிருப்பதாக அறிவித்தனர். | [16][17][18][19][20] | |
![]() ரணில் விக்கிரமசிங்க (73) ஐக்கிய தேசியக் கட்சி |
பதில் அரசுத்தலைவர் (14 சூலை 2022 முதல்) பிரதமர் (12 மே 2022 முதல்) ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் (1994 முதல்) தேசியப்பட்டியல் |
16 சூலை 2022 | தினேஷ் குணவர்தன மனுச நாணயக்கார |
இபொமு-வின் தலைவர் தினேஷ் குணவர்தன, பொதுச் செயலர் சாகர காரியவசம், இபொமு-வின் இளைஞர் அணி உட்பட சிலர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.[21][22][23] | [21] | |
![]() அனுர குமார திசாநாயக்க (53) மக்கள் விடுதலை முன்னணி |
பதவி இல்லை மக்கள் விடுதலை முன்னணி (2014 முதல்) கொழும்பு |
16 சூலை 2022 | விஜித ஹேரத் அரிணி அமரசூரியா |
[24][25] |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | |
---|---|---|---|---|
ரணில் விக்கிரமசிங்க | ஐக்கிய தேசியக் கட்சி | 134 | 61.19 | |
டளஸ் அளகப்பெரும | இலங்கை பொதுசன முன்னணி | 82 | 37.44 | |
அனுர குமார திசாநாயக்க | மக்கள் விடுதலை முன்னணி | 3 | 1.37 | |
மொத்தம் | 219 | 100.00 | ||
செல்லுபடியான வாக்குகள் | 219 | 98.21 | ||
செல்லாத/வெற்று வாக்குகள் | 4 | 1.79 | ||
மொத்த வாக்குகள் | 223 | 100.00 | ||
பதிவான வாக்குகள் | 225 | 99.11 |
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)