இலங்கை இலை மூக்கு மரப்பல்லி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | கெமிடாக்டைலசு
|
இனம்: | கெ. திப்ரசசு
|
இருசொற் பெயரீடு | |
கெமிடாக்டைலசு திப்ரசசு கிரே, 1842[2] | |
வேறு பெயர்கள் | |
|
கெமிடாக்டைலசு திப்ரசசு (Hemidactylus depressus) என்பது இலங்கை இலை-மூக்கு மரப்பல்லி அல்லது கண்டியன் பல்லி என்று அழைக்கப்படுகிறது. இது இலங்கைத் தீவில் உள்ள மரப்பல்லி சிற்றினமாகும்.
இலங்கை இலை மூக்கு மரப்பல்லியின் தலை பெரியது. தலையில் பெரிய துகள்கள் போன்று காணப்படும். நீள் மூக்கில் அதிகமாக உள்ளது. வால் அடர் வண்ண குறுக்கு பட்டைகளுடன் காணப்படும்.[3]
கந்தளாய், கிரிதலே, மாங்குளம், அலுத்நுவர, ஹுனுகல்ல, எல்கடுவ, மாத்தளை, ரத்தோட்ட, கம்மதுவ, கண்டி, நக்கிள்ஸ் மலைத்தொடர், ஹரகம, வக்வல்லா, பலாவிலகுடாவ, பலாவிலகொடவு ஆகிய பிரதேசங்களில் மட்டும் காணப்படும், இலங்கையைச் சேர்ந்த மரப்பல்லி இதுவாகும்.[4]
சமவெளிகளிலிருந்து மரங்கள், கற்பாறைகள் மற்றும் குகைகளில் காணப்படும் இந்த மரப்பல்லி சில சமயங்களில் வீடுகளுக்குள் நுழையும். உணவு என்பது பூச்சிகளைப் பிரதானமாக உட்கொள்கிறது.
சூன் மற்றும் ஆகத்து மாதங்களுக்கிடையே பாறைப் பிளவுகள், மரத் துளைகள், இலைக் குப்பைகள் ஆகியவற்றில் ஒரு நேரத்தில் 2 முட்டைகள் வரை இட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. ஆகத்து மற்றும் செப்டம்பர் மாதங்களில் குஞ்சுகள் பொரிக்கின்றன.