இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) Ceylon Communist Party (Maoist) | |
---|---|
leader = | |
இலங்கையின் அரசியல் கட்சிகள் | |
தொடக்கம் | 1964, இலங்கை |
அரசியல் தத்துவம் | பொதுவுடமை, மார்க்சியம்-லெனினியம் |
இது இலங்கை அரசியல் தொடர்பான தொடரின் கட்டுரையாகும். | |
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்டு) (Ceylon Communist Party (Maoist)) என்பது இலங்கையின் ஓர் இடதுசாரி அரசியல் கட்சியாகும். 1964 ஆம் ஆண்டில் கொள்கை வேறுபாடு காரணமாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து சென்றோரால் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இக்கட்சியும் இலங்கை கம்யூனிஸ்டுக் கட்சி என்றே அழைக்கப்பட்டு வந்தது. ஆனாலும், அதன் தாய்க் கட்சியில் இருந்து பிரித்தற்வதற்காக 'இலங்கை கம்யூனிஸ்டுக் கட்சி (பீக்கிங் சார்பு)' போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தது. 1960களின் இறுதியில் இக்கட்சி ஒரு முக்கிய இடதுசாரிக் கட்சியாகத் திகழ்ந்தது. இதன் முதலாவது பொதுச் செயலாளராக நா. சண்முகதாசன் விளங்கினார். இவர் 1993 ஆம் ஆண்டில் இறக்கும் வரை அதன் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார்.[1][2][3]
இக்கட்சியும் காலப்போக்கில் பல பிரிவுகளாகப் பிளவடைந்து நலிவடைந்தது. 1978 ஆம் ஆண்டில் நா. சண்முகதாசன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி தமிழரின் சுயநிர்ணயத்தை ஏற்காமை, மூன்றுலகக் கோட்பாட்டை நிராகரிப்பது என்ற முடிவைப் பகிரங்கப்படுத்துவதில்லை என்ற மத்திய குழு முடிவை மீறி பகிரங்க அறிக்கை வெளியிட்டது என்கிற காரணங்களால் கே. ஏ. சுப்பிரமணியம் உட்படப் பலர் அக்கட்சியிலிருந்து வெளியேறி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (இடது) என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தோற்றுவித்தனர்.