| |||||||||||||||||||||||||||||||
இலங்கைப் பிரதிநிதிகள் சபைக்கு 151 இடங்கள் பெரும்பான்மைக்கு 76 இடங்கள் தேவை | |||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||
|
இலங்கையின் 6வது நாடாளுமன்றத் தேர்தல் 1965 மார்ச் 22 இல் நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு 151 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது.
1964 டிசம்பரில் லேக்ஹவுஸ் பத்திரிகைகள் தேசியமயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆளும் இலங்கை சுதந்திரக் கட்சியில் இருந்து சில உறுப்பினர்கள் வெளியேறியதை அடுத்து சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசு நாடாளுமன்றத்தில் பலம் இழந்தது. பண்டாரநாயக்காவின் தாராள தேசியமயமாக்கல் கொள்கை காரணமாக இலங்கைத் தீவின் வணிக சமூகத்தினரின் அதிருப்திக்கு அவர்கள் ஆளாக வேண்டி வந்தது. இதனால் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் செல்வாக்கு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. நாட்டின் பொருளாதாரம் நலிவடைந்தது. தீவிர உணவுப் பற்றாக்குறையால் உணவுப் பங்கீட்டு முறை நாட்டில் அமுல் படுத்தப்பட்டது.
சுதந்திரக் கட்சிக்கும் அவர்களுன் மார்க்சியக் கூட்டணிக்கும் எதிராக தேசிய முன்னணி ஒன்றை அமைக்கவிருப்பதாக ஐதேக வாக்குறுதி அளித்தது. சிங்களத் தேசியவாதிகளுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என ஐதேக தலைவர் டட்லி சேனநாயக்கா வாக்குறுதி அளித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. ஆனாலும், இலங்கைத் தமிழரசுக் கட்சியினரின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தார்.
கட்சி | வேட்பாளர்கள் | வாக்குகள் | % | இடங்கள் | |
---|---|---|---|---|---|
ஐக்கிய தேசியக் கட்சி | 116 | 1,590,929 | 39.31 | 66 | |
இலங்கை சுதந்திரக் கட்சி | 101 | 1,221,437 | 30.18 | 41 | |
இலங்கைத் தமிழரசுக் கட்சி | 20 | 217,914 | 5.38 | 14 | |
லங்கா சமசமாஜக் கட்சி | 25 | 302,095 | 7.47 | 10 | |
இலங்கை சுதந்திர சோசலிசக் கட்சி | 32 | 130,429 | 3.22 | 5 | |
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி | 9 | 109,754 | 2.71 | 4 | |
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் | 15 | 98,746 | 2.44 | 3 | |
மகாஜன எக்சத் பெரமுன | 61 | 96,665 | 2.39 | 1 | |
தேசிய விடுதலை முன்னணி | 10 | 18,791 | 0.46 | 1 | |
ஏனையோர் | 106 | 259,960 | 6.42 | 6 | |
செல்லுபடியான வாக்குகள் | 495 | 4,046,720 | 100.00 | 151 | |
நிராகரிகக்ப்பட்ட வாக்குகள் | |||||
பதிவான மொத்த வாக்காளர்கள் | |||||
மொத்த வாக்காளர்கள்1 | 3,821,918 | ||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 4,710,887 | ||||
Turnout2 | 81.13% | ||||
Source: Sri Lanka Statistics 1. பல-அங்கத்தவர் தொகுதிகளில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குகளை அளிக்க அனுமதிக்கப்பட்டனர். 2. கொழும்பு தெற்குத் தொகுதியில் ஜே. ஆர். ஜெயவர்தனா (ஐதேக), பெர்னார்ட் சொய்சா (லசசக) ஆகியோர் போட்டியின்றித் தெரிவாகினர். |
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help); Unknown parameter |=
ignored (help){{cite web}}
: Check date values in: |archive-date=
(help); Unknown parameter |=
ignored (help)