![]() | |||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||
இலங்கை தேசிய அரசுப் பேரவைக்கு 168 இடங்கள் பெரும்பான்மைக்கு 85 இடங்கள் தேவை | |||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||||||||
|
இலங்கையின் 8வது நாடாளுமன்றத் தேர்தல் 1977 சூலை 21 இல் நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்றத்தின் தேசிய அரசுப் பேரவைக்கு 168 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது.
பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி அரசு தனது ஆட்சிக்காலத்தில் முன்னெப்போதும் இல்லாது மக்களிடையே செல்வாக்கை இழந்திருந்தது. அவரது பொருளாதாரக் கொள்கை நாட்டில் தொழில் வளர்ச்சி கண்டிருந்தாலும், வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க முடியவில்லை. அரசியலமைப்பின் படி 1975 ஆம் ஆண்டில் நடத்தப்பட வேண்டிய தேர்தல் 1972 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி நாடாளுமன்ரத்தின் பதவிக்காலம் மேலும் இரண்டாண்டுகள் நீடிக்கப்பட்டது. அரசாங்கத்தின் சிங்களத் தேசியவாதம் மிகப் பலமாகத் தலை தூக்கியதில் தமிழ்ப் பகுதிகளில், குறிப்பாக நாட்டின் வட மாகாணத்தில் அரசியல் குழப்ப நிலை தோன்றியது. நாடு முழுவதும் அவசரகால நிலையை அரசு கொண்டு வந்தது. ஐக்கிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகளிடையே பிளவுகள் தோன்றின.
அதே வேளை, 1970 தேர்தலில் படு தோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் செல்வாக்குப் பெற ஆரம்பித்தது. இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு மூலமாகத் தீர்வு காணப்படும் என அது உறுதி அளித்தது. திறந்த பொருளாதாரத்தை முன்னெடுக்கப்போவதாக அறிவித்தது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் பங்கீட்டு அடிப்படையில் இலவசமாக வழங்கப்பட்ட இரண்டு கிலோகிராம் அரிசியை விட மேலதிகமாக எட்டு இறாத்தல் மாவும் இலவசமாக வழங்க அது உறுதி அளித்தது.
பழைய தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழரசுக் கட்சியின் தலைவர் அ. அமிர்தலிங்கம் தலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணியை அமைத்து தமிழர் பிரதேசங்களுக்கு தனிநாட்டுக் கோரிக்கை முன்வைத்தனர்.
இலங்கையின் வரலாற்றிலேயே முதற் தடவையாக ஐக்கிய தேசியக் கட்சி மூன்றில் இரண்டுக்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. அதே வேளையில், இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில், முதற் தடவையாக தமிழர் கட்சி ஒன்று இரண்டாவது அதிகப்படியான இடங்களைக் கைப்பற்றி நடாளுமன்றத்தில் அதிகாரபூர்வ எதிர்க்கட்சியாக வந்தது.
1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் நடத்தப்பட்ட ஒரேயொரு பொதுத் தேர்தல் இதுவேயாகும்[1].
கட்சி | வேட்பாளர்கள் | வாக்குகள் | % | இடங்கள் | |
---|---|---|---|---|---|
ஐக்கிய தேசியக் கட்சி | 154 | 3,179,221 | 50.92 | 140 | |
தமிழர் விடுதலைக் கூட்டணி | 23 | 421,488 | 6.75 | 18 | |
இலங்கை சுதந்திரக் கட்சி | 147 | 1,855,331 | 29.72 | 8 | |
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் | 2 | 62,707 | 1.00 | 1 | |
லங்கா சமசமாஜக் கட்சி | 82 | 225,317 | 3.61 | 0 | |
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி | 25 | 123,856 | 1.98 | 0 | |
மகாஜன எக்சத் பெரமுன | 27 | 22,639 | 0.36 | 0 | |
ஏனையோர் | 295 | 353,014 | 5.65 | 1 | |
செல்லுபடியான வாக்குகள் | 755 | 6,243,573 | 100.00 | 168 | |
நிராகரிக்கப்பட்டவை | |||||
பதிவான மொத்த வாக்காளர்கள் | |||||
மொத்த வாக்காளர்கள்1 | |||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 6,667,589 | ||||
Turnout | |||||
மூலம்: Sri Lanka Statistics 1. பல-அங்கத்தவர் தொகுதிகளில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குகளை அளிக்க அனுமதிக்கப்பட்டனர். |
{{cite web}}
: Check date values in: |access-date=
and |archive-date=
(help); Unknown parameter |=
ignored (help){{cite web}}
: Check date values in: |access-date=
and |archive-date=
(help); Unknown parameter |=
ignored (help)